மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

குயின்: நான்கு மொழிகளிலும் நிறைவு!

குயின்: நான்கு மொழிகளிலும் நிறைவு!

இந்தியில் வெளியான குயின் திரைப்படம் நான்கு மொழிகளில் ரீமேக்காகி வருகிறது. தற்போது நான்கு படங்களின் படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாகவும், அக்டோபரில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருப்பதாகவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

பாலிவுட்டில் 2014ஆம் ஆண்டு கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான படம் ‘குயின்’. திருமணத்திற்கு இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில் மணப்பெண்ணிடம் தனக்குத் திருமணம் வேண்டாம் என காதலனான மணமகன் கூறுவதால் அவள் அதிர்ச்சிக்குள்ளாகிறாள். அதை தொடர்ந்து அவள் அதிரடியாக எடுக்கும் முடிவுதான் குயின் கதை. விகாஸ் பாஹ்ல் இயக்கியிருந்த இப்படம் கங்கனா ரனாவத்திற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது மற்றும் ஃபிலிம்ஃபேர் விருதை பெற்றுத் தந்தது.

இந்தப் படத்தின் ரீமேக் வெர்ஷன்களில் காஜல் அகர்வால் தமிழிலும் (பாரிஸ் பாரிஸ்), தமன்னா தெலுங்கிலும் (தட் இஸ் மகாலக்ஷ்மி), மஞ்சிமா மோகன் மலையாளத்திலும் (ஜாம் ஜாம்), பாருல் யாதவ் கன்னடத்திலும் (பட்டர்ஃப்ளை) நடிக்கின்றனர்.

இதனை நான்கு மொழிகளிலும் மீடியன்ட் நிறுவனம் சார்பில் மனு குமரன் பிரம்மாண்டமாகத் தயாரித்து வருகிறார். இது குறித்து மனு குமரன், “படப்பிடிப்பு முடிகிறதே என்ற துக்கம் ஏற்பட்டது. ஒரே நேரத்தில் 4 திரைப்படங்களும் நூறு நாட்களுக்கு மேல், மூன்று நாடுகளில் உள்ள ஏழு நகரங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது” என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், “படத்தின் தரத்தை பார்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளது. அனைத்து நடிகர்களும் தாங்கள் நடிக்கும் கதாபாத்திரங்களின் தன்மையை அறிந்து சிறப்பாக நடித்துள்ளனர். நடிகர்களின் வித்தியாசமான பரிணாமங்கள் கண்டிப்பாக ரசிகர்களைக் கவரும்” என்றும் கூறியுள்ளார்.

தமிழ் மற்றும் கன்னடத்தில் ரமேஷ் அரவிந்தும், தெலுங்கில் பிரஷாந்த் வர்மாவும், மலையாளத்தில் நீலகண்டாவும் இயக்குநர்களாகப் பணியாற்றி வருகின்றனர். தற்போது, 4 வெர்ஷன்களின் ஷூட்டிங்கும் நிறைவு பெற்றுள்ளது. இதனால் படத்தை 4 மொழிகளிலுமே அக்டோபர் மாதத்தில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். விரைவில் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிது.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018