மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

ஏசிகளுக்கான வரி குறைய வாய்ப்பு!

ஏசிகளுக்கான வரி குறைய வாய்ப்பு!

சிமெண்ட், ஏசி உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கான வரி விகிதம் வரும் நாட்களில் குறைக்கப்படலாம் என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சராகப் பொறுப்பு வகித்த அருண் ஜேட்லி சிறுநீரக அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வெடுத்து வருகிறார். இந்தச் சூழலில் தற்காலிக நிதியமைச்சராக பியூஷ் கோயல் பொறுப்பு வகிக்கிறார். ஜூலை 21ஆம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சானிட்டரி நாப்கின், ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டது. இந்த வரிக் குறைப்புக்கு அருண் ஜேட்லி தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

வரி வருவாய் அதிகமாக இருப்பதால், தற்போது 28 சதவிகித வரி வளையத்தில் உள்ள ஏசி, பெரிய தொலைக் காட்சிப் பெட்டி மற்றும் சிமெண்ட் ஆகியவற்றின் ஜிஎஸ்டி வரி குறைக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளார். “13 மாதங்களில், 28 விழுக்காடு விகிதாச்சார பிரிவிலிருந்து ஏராளமான பொருட்களை ஜிஎஸ்டி கவுன்சில் நீக்கிவிட்டது. காங்கிரஸ் மரபு வரியின் இரங்கல் செய்தியை எழுதுவதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை. கடந்த ஓராண்டு காலமாக, 384 பொருட்களுக்கான வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது; ஒரு பொருளுக்குக் கூட வரி விகிதம் உயர்த்தப்படவில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018