மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

உத்தவ் தாக்கரேவுக்கு ராகுல் வாழ்த்து!

உத்தவ் தாக்கரேவுக்கு ராகுல் வாழ்த்து!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

சமீபகாலமாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் அவர் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியைக் கட்டிப்பிடித்தது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.

இதைதொடர்ந்து, நேற்று (ஜூலை 27) சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் ராகுல். நல்ல உடல் ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் கிடைக்க வாழ்த்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். பாஜக கூட்டணியில் இருந்த சிவசேனா கட்சித் தலைவருக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் வாழ்த்து தெரிவித்தது மீண்டும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

“அரசியல் பகையை கடந்து தனிப்பட்ட உறவுகளை மேம்படுத்துவதற்காக ராகுல் எடுத்துவரும் முயற்சி இது” என்று காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

ஆனால், நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் போது சிவசேனா கட்சியினர் நடுநிலை வகித்தனர். இதுதவிர நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது ராகுல் பேசியதற்கும், பிரதமரை கட்டிப்பிடித்ததற்கும் சிவசேனா கட்சியினர் பாராட்டிப் பேசியிருந்தனர்.

இந்த நிலையில் தற்போது உத்தவ் தாக்கரேவுக்கு ட்விட்டரில் ராகுல் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆனால் உத்தவ் தாக்கரேவுக்கு ட்விட்டர் கணக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தவ் தாக்கரேவுக்கு பிரதமர் மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018