மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

பாவ மன்னிப்பை ரத்து செய்ய எதிர்ப்பு: பிரதமருக்குக் கடிதம்!

பாவ மன்னிப்பை ரத்து செய்ய எதிர்ப்பு: பிரதமருக்குக் கடிதம்!

தேவாலயங்களில் பாவமன்னிப்பு கேட்கும் வழக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்கிற தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரைக்கு, கேரள கத்தோலிக்க பேராயர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளது.

கேரள மாநிலத்தில் மலங்கார ஆர்த்தடாக்ஸ் சிரியன் தேவாலயத்தில் பாவ மன்னிப்பு கேட்க வந்த திருமணமான பெண்ணை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல்செய்ததாக நான்கு பாதிரியார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல, கோட்டயத்தில், ரோமன் கத்தோலிக்க பிரிவைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவரை, பேராயர் ஒருவர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, "கேரளாவில் உள்ள தேவாலயங்களில் பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் வன்முறைகள் அதிகம் நடப்பது குறித்து மத்திய புலனாய்வு முகமைகள் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாவ மன்னிப்பு கோர வரும் பெண்களிடம் பாதிரியார்கள் பாலியல் தொல்லை கொடுப்பதால், தேவாலயத்தில் பாவ மன்னிப்பு கேட்கும் முறையை நீக்க வேண்டும்" என்று தேசிய மகளிர் ஆணைக் குழு பிரதமர் நரேந்திர மோடிக்கு அறிக்கை அனுப்பியுள்ளது.

இந்நிலையில், கேரளாவில் நடைபெற்ற கத்தோலிக்க பேராயர்கள் கூட்டத்தில், "பாவ மன்னிப்பு கேட்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறிய தேசிய மகளிர் ஆணைக் குழுவின் கருத்துக்குக் கண்டனம்" தெரிவிக்கப்பட்டது.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018