மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

மோடியிடம் ஆட்டோகிராஃப் : மாணவிக்குக் குவியும் வரன்கள்!

மோடியிடம் ஆட்டோகிராஃப் : மாணவிக்குக் குவியும் வரன்கள்!

மேற்கு வங்காளத்தில் மோடியிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய பின்னர், மாணவிக்கு அதிக வரன்கள் வருவதாக மாணவியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 16 ஆம் தேதி மிட்னாபூரில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, திடீரென கூட்டத்துக்கு போடப்பட்டிருந்த கூடார பந்தல் சரிந்து விழுந்தது. அதில், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தனர். அவர்களைப் பார்க்க பிரதமர் மோடி மருத்துவமனைக்குச் சென்றார். அப்போது, மோடி ஒரு மாணவியிடம் சென்று உடல் நலம் எப்படி இருக்கிறது என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த மாணவி, “உங்களை இவ்வளவு அருகில் பார்த்தது மிகவும் மகிழ்ச்சி. எனக்கு ஆட்டோகிராஃப் போட்டு தருவீர்களா? என்று கேட்டுள்ளார். உடனே அருகில் இருந்தவரிடம் பேப்பரை வாங்கி ஆட்டோகிராஃப் போட்டு கொடுத்தார்.

இதுகுறித்து செய்தியும் வெளியானது.இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து, கடந்த சில நாட்களாகப் பிரதமரின் ஆட்டோகிராஃப்பைக் பார்க்க பலர் தங்கள் வீட்டுக்கு வருகின்றனர். இதுமட்டுமில்லாமல், மாணவி ரிதாவை வரதட்சணை இல்லாமல் திருமணம் செய்து கொள்ள பலரும் பெண் கேட்டு வருகின்றனர் என மாணவியின் பெற்றோர் கூறினர்.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018