மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

பிரசாதம்:200 பேருக்கு உடல்நலம் பாதிப்பு!

பிரசாதம்:200 பேருக்கு உடல்நலம் பாதிப்பு!

திருவாரூர் அருகே கோயில் திருவிழாவில் பிரசாதம் சாப்பிட்ட சுமார் 200 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் குவளைக்கால் கிராமத்தில் நேற்று (ஜூலை 27) இரவு கோயில் திருவிழா ஒன்றில் பக்தர்கள் பிரசாதம் சாப்பிட்டுள்ளனர். அதில், பலபேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பலருக்கு கோவில் வளாகத்திலேயே 5 மருத்துவக்குழுக்கள் வாயிலாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக, சுகாதாரத்துறையைச் சேர்ந்த அதிகாரியான செந்தில்குமார் கூறியபோது, “கோயில் திருவிழாவில் சுமார் 250 பேருக்கு மேல் பக்தர்கள் பிரசாதம் சாப்பிட்டிருக்கிறார்கள். அதில், சுமார் 200 பேருக்கு வயிற்றுபோக்கு, வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 20 பேர் நன்னிலம் பொது அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று தெரிவித்தார்.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018