மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

படப்பிடிப்பை முடித்த ஜோதிகா டீம்!

படப்பிடிப்பை முடித்த ஜோதிகா டீம்!

ஜோதிகா கதாநாயகியாக நடித்துள்ள ‘காற்றின் மொழி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

36 வயதினிலே மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி ஆன ஜோதிகா, தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார் உள்ளிட்ட கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவாகும் படங்களிலேயே நடித்து வருகிறார். ராதா மோகன் இயக்கத்தில் உருவாகும் ‘காற்றின் மொழி’ திரைப்படமும் அதே பாணியில் உருவாகிவருகிறது. இது பாலிவுட்டில் வித்யா பாலன் நடிப்பில் வெளியான ‘தும்ஹரி சுலு’ படத்தின் ரீமேக் ஆகும்.

ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்கியது. ஆகஸ்ட் முதல் வாரத்திற்குள் ஒரே கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிடப் படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். அதற்காகப் படத்தில் நடிக்கும் ஜோதிகா, விதார்த், லட்சுமி மஞ்சு உள்ளிட்ட அனைத்து நடிகர், நடிகைகளிடமும் மொத்தமாக கால்ஷீட் வாங்கப்பட்டிருந்தது. ஆனால் பத்து நாள்களுக்கு முன்பாகவே படக்குழு படப்பிடிப்பை முடித்துள்ளது. இறுதி நாள் படப்பிடிப்பில் அனைத்து நடிகர்களும் பங்குபெறும் உணர்ச்சிபூர்வமான காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அது முடிந்ததும் இரவு 1 மணிக்கு படக்குழுவினர் கேக் வெட்டி படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளனர்.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018