மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவில் முதலீடு!

ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவில் முதலீடு!

இந்தியாவுடனான பொருளாதார உறவு மேம்பட்டு வருவதால், இந்தியாவின் உள்கட்டுமானத் திட்டங்களில் ஐக்கிய அரபு அமீரகம் 75 பில்லியன் டாலரை முதலீடு செய்யவுள்ளது.

இதுகுறித்து மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரக நாட்டுக்கும் இடையே உள்ள இருதரப்பு வர்த்தகத்தில் ஐந்து முக்கியத் துறையில் உள்கட்டுமானத் துறைக்கு முதன்மைக் கவனம் செலுத்தப்படுகிறது. அந்நாடு இதுவரையில் இந்தியாவில் 5.3 பில்லியன் டாலருக்கு (சுமார் ரூ.36,37,125 கோடி) மேல் முதலீடு செய்துள்ளது. அதேபோல, இந்தியாவின் உள்கட்டுமானத் திட்டங்களில் இனி 75 பில்லியன் டாலருக்கு (சுமார் ரூ.5,14,687.50 கோடி) மேல் முதலீடு செய்யவும் அந்நாடு ஒப்புக்கொண்டுள்ளது. மேலும், செயற்கை நுண்ணறிவுத் துறையில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட அந்நாட்டின் செயற்கை நுண்ணறிவுத் துறை அமைச்சர் ஜூலை 27ஆம் தேதி கையெழுத்திட்டுள்ளார்’ என்று கூறப்பட்டுள்ளது.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018