மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

கும்பல் கொலைகளுக்கு எதிரான சட்ட முன்வரைவு!

கும்பல் கொலைகளுக்கு எதிரான சட்ட முன்வரைவு!

கும்பல் கொலைகளுக்கு எதிரான சட்டத்தை கொண்டு வருவதற்கு மத்திய அரசினால் நியமிக்கப்பட்ட சிறப்பு குழுவின் முதல் அமர்வு இன்று(28.07.18) தொடங்கியது.

டெல்லியில் இன்று மத்திய உள்துறை செயலர் ராஜீவ் கௌபாவின் தலைமையில் தொடங்கிய அமா்வில், வழக்கறிஞர் அனாஸ் தன்வீர் மற்றும் சமூக செயல்பாட்டாளர் டெஹ்சீன் பூனவாலா உள்ளிட்ட சமூக செயல்பாட்டாளர்களும் முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இவர்களில் பூனவாலா என்பவா்தான் கும்பல் கொலைகளுக்கு தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்.

இது தொடர்பாக பூனவாலா, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு அளித்த பேட்டியில், நாங்கள் கும்பல் கொலைகளுக்காக கடந்த ஓராண்டாக தயாரித்துள்ள சட்ட முன் வரைவு ஒன்றை சமர்ப்பித்துள்ளோம். விரைவில் இது சட்டமாக்கப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கும்பல் கொலைகளுக்கெதிரான சட்ட முன்வரைவில் இக்குற்றத்தில் ஈடுபவருக்கு ஆயுள் தண்டனையுடன் 5 லட்சம் அபராதம் விதிக்கப்படும். குற்றமானது பிணையில் வெளி வரமுடியாத குற்றமாக கருதப்படும். கும்பல் வன்முறையில் ஈடுபடும்போது கடமையை செய்யத் தவறும் போலீஸ் அதிகாரிகளுக்கு 6 மாத சிறைத்தண்டனையும் 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.

இக்குழுவில் அளிக்கப்படும் ஆலோசனைகள் தொகுக்கப்பட்டு உள்துறை அமைச்சகத்திற்கு 4 வாரத்திற்குள் அறிக்கை அளிக்கப்படும். இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் கொண்ட ஒரு குழுவினால் பரிசீலிக்கப்பட்டு பிரதமரிடம் அறிக்கையாக சமர்ப்பிக்கப்படும்.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018