மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

ஆதார் சட்டம் திருத்தப்பட வேண்டும்!

ஆதார் சட்டம் திருத்தப்பட வேண்டும்!

ஆதார் சட்டத்தில் தனி நபரின் அந்தரங்கத் தகவல்களை பாதுகாப்பதற்கு ஏற்ப திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி நேற்று (27.07.18)பரிந்துரை அளித்துள்ளது.

ஆதார் அடையாள அட்டையில் அளிக்கப்பட்ட குடிமக்களின் அந்தரங்கத் தகவல்கள் பாதுகாக்கப்படவில்லை. அந்த தகவல்களை தனியார் கம்பெனிகள் பயன்படுத்துகின்றன என நாடு முழுவதும் தொடர்ந்து புகார்கள் எழுந்தன. ஆந்திராவில் சில இடங்களில் ஆதார் அட்டை தகவல்கள் வெளியிடப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இதனால் ஆதார் தகவல்களை பாதுகாக்கும்படி அந்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. ஓராண்டு ஆய்வு செய்த பின்னர் கமிட்டி தனது பரிந்துரைகளை தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கரிடம் சமர்ப்பித்துள்ளது.

அந்த பரிந்துரைகளில் கூறியுள்ளதாவது:

ஆதார் அடையாள அட்டைக்காக குடிமகன்களிடமிருந்து பெறப்பட்ட பயோமெட்ரிக் தகவல்களை பயன்படுத்திட முறையான அனுமதி பெற வேண்டும். தகவல்களை எந்த நோக்கத்திற்காக பயன்படுத்த அனுமதி கேட்கப்பட்டதோ, அந்த நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்திட வேண்டும்.

தகவல்கள் தவறாக பயன்படுத்தப்பட்டால் அப்படி பயன்படுத்துபவர் 5 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் அல்லது தகவல்களை பயன்படுத்தும் கம்பெனி உலகளவில் ஈட்டிய முந்தைய ஆண்டின் வருமானத்திலிருந்து 2 விழுக்காட்டை அபராதமாக செலுத்த வேண்டும்.

மேற்கூறிய பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஆதார் சட்டத்தில் பிரிவு 8 உடன் 8 ஏ சேர்க்கப்பட வேண்டும்.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018