மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

அம்மா குழந்தைகள் நலப் பெட்டகம்: மனு தள்ளுபடி!

அம்மா குழந்தைகள் நலப் பெட்டகம்:  மனு தள்ளுபடி!

தமிழக அரசின் அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டக திட்டத்தின் டெண்டருக்குத் தடை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆயிரம் ரூபாய் மதிப்புடைய "அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம்" வழங்கும் திட்டத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

இந்த பரிசுப் பெட்டகத்தில் குழந்தையைப் பராமரிப்பதற்குத் தேவையான பராமரிப்புத் துண்டு, குழந்தைக்கான உடை, படுக்கை, கொசு வலை, நாப்கின், நகவெட்டி உள்ளிட்ட ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 16 வகையான பொருட்கள் இருக்கும். இத்திட்டத்தின் கீழ், தமிழகத்தில் ஆண்டுக்கு 1 லட்சம் குழந்தைகளுக்கு மருத்துவப் பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை வழங்கத் தமிழக அரசு ஒப்பந்தப் புள்ளி கோரியது.

இது தொடர்பாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது ரபிக் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், அரசு, தனக்குச் சாதகமான இரு நிறுவனங்களுக்கு ஒப்பந்தப் புள்ளிகளை வழங்கும் வகையில் 3 லட்சம் பெட்டகங்கள் தயாரிக்கக்கூடிய நிறுவனங்கள் மட்டுமே கலந்துகொள்ளலாம் என நிபந்தனைகளை வகுத்து உள்ளது. அதனால் இந்த டெண்டருக்குத் தடை விதிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.வேணுகோபால் மற்றும் எம்.நிர்மல் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (ஜூலை 27) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண், “டெண்டருக்கு விண்ணப்பிக்காத நிறுவனமோ, டெண்டர் நடவடிக்கைகளில் தொடர்பில்லாத மூன்றாவது நபரோ டெண்டருக்குத் தடை விதிக்கக் கோர முடியாது” எனத் தெரிவித்தார்.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018