மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

வதந்திகளைத் தடுக்க 1 மாத கால அவகாசம்!

வதந்திகளைத் தடுக்க 1 மாத கால அவகாசம்!

வதந்திகள் பரவுவதைத் தடுக்க இன்னும் ஒரு மாத காலத்திற்குள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என சமூக வலைதளங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஃபேஸ்புக், வாட்ஸ் அப், கூகுள், யாஹூ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளால் இந்தியா முழுவதும் கொலைவெறித் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதனையடுத்து வதந்திகளைத் தடுக்கும் தொழில்நுட்பத்தை இன்னும் ஒரு மாத காலத்திற்குள் நடைமுறைப்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதன் பி. லோகுர், தீபக் குப்தா அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு நேற்று (ஜூலை 27) விசாரணைக்கு வந்தபோது, "குழந்தைளை பாதிக்கும் ஆபாசப்படங்கள், கூட்டுப் பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளிட்ட பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவுவதைத் தடுக்க 1 மாத காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நாள் ஒன்றிற்கு ரூ.5 லட்சம் வரையில் அபராதம் விதிக்கப்படும்" என்று உத்தரவிட்டனர்.

மேலும், "சமூக வலைதளங்களில் இது போன்ற ஆட்சேபிக்க முடியாத சமுதாய சீர்கேடுகள் பரவிக் கிடக்கிறது. இதனைத் தடுக்க இதுவரை நீங்கள் என்ன முயற்சி எடுத்துள்ளீர்கள்? இதனால் ஏற்படும் கொலைவெறித் தாக்குதல்களால் அப்பாவி மக்கள் பலியாகிறார்கள். உங்கள் கண்களுக்கு இது தெரியவில்லையா?" என்று கேள்வி எழுப்பினர்.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018