மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

டிஎன்பிஎல்: காரைக்குடியின் த்ரில் வெற்றி!

டிஎன்பிஎல்: காரைக்குடியின் த்ரில் வெற்றி!

டிஎன்பிஎல் நேற்றைய போட்டியில் காரைக்குடி காளை அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 17ஆவது லீக் போட்டி திருநெல்வேலி ஐசிஎல் சங்கர் நகர் மைதானத்தில் நேற்று (ஜூலை 27) நடைபெற்றது. இதில் திருச்சி வாரியர்ஸ், காரைக்குடி காளை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. காரைக்குடி அணியினரின் துல்லியமான பந்துவீச்சைத் தாக்குபிடிக்க முடியாமல் திருச்சி வாரியர்ஸ் அணியினர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் திருச்சி அணி, 89 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து மூன்றிலக்க ரன்களை எடுக்கத் தடுமாறிக் கொண்டிருந்தது. கடைசி விக்கெட்டுக்கு எம்எஸ் சஞ்சய் அதிரடியாக 17 பந்துகளில் 28 ரன்களை சேர்த்ததனால் அந்த அணி 19.5 ஓவர்களில் 114 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. காரைக்குடி காளை சார்பில் மோகன் பிரசாத் 3 விக்கெட்டுகளும், யோ மகேஷ், ராஜ்குமார் ஆகியோர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018