மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

சிலை பாதுகாப்பு மையங்கள் அமைத்ததில் முறைகேடு!

சிலை பாதுகாப்பு மையங்கள் அமைத்ததில் முறைகேடு!

தமிழகத்தில் உள்ள கோயில்களில் சிலை பாதுகாப்பு மையங்கள் அமைத்ததில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் சிலைகளைப் பாதுகாக்க, 15 சிலை பாதுகாப்பு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் மீட்டச் சிலைகளை பாதுகாப்பு அறைகளில் வைக்காமல் சம்பந்தப்பட்ட கோயில்களிடம் ஒப்படைக்கக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், "15 சிலை பாதுகாப்பு மையங்கள் அமைக்க தலா 90 லட்சம் ரூபாய் முதல் 95 லட்சம் ரூபாய் வரை அறநிலையத் துறை ஒதுக்கியுள்ளது. இதில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இது தொடர்பாக பொன்மாணிக்கவேல் தலைமையில் இரண்டு இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் அடங்கிய விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும்" எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018