மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

கருணாநிதி மீண்டும்  மருத்துவமனையில் அனுமதி!

தனது கோபாலபுரம் இல்லத்தில் சிகிச்சை பெற்றுவந்த திமுக தலைவர் கருணாநிதி ஜூலை 28 நள்ளிரவு 1.30 மணி அளவில் மீண்டும் காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

நேற்று இரவு 10.20 மணி அளவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் மற்றும் பல திமுக நிர்வாகிகள் கோபாலபுரம் வந்து நலன் விசாரித்துச் சென்ற நிலையில் அதுவரை அங்கே இருந்த செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தன் இல்லத்துக்குப் புறப்பட்டுக்கொண்டிருந்தார்.

அதன் பின் கொஞ்ச நேரத்தில் கோபாலபுரத்தில் கருணாநிதியைக் கண்காணித்துவந்த டாக்டர்களில் ஒரு சிலர் மட்டும் புறப்பட்டனர். மற்ற டாக்டர்கள் கண்காணிப்புப் பணியை மேற்கொண்டிருந்தனர்.

திடீரென இரவு 11.45 மணியளவில் ஸ்டாலின் தனது இல்லத்திலிருந்து அவசர அவசரமாக கோபாலபுரத்துக்கு வந்தார். ‘தலைவருக்கு ரொம்ப முடியலை. ரத்த அழுத்தம் இறங்கிக்கிட்டே இருக்கு’ என்ற தகவலை அடுத்துதான் உடனே புறப்பட்டு வந்தார் ஸ்டாலின். அழகிரி, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் அங்கே இருந்தனர்.

அந்த நள்ளிரவிலும் கோபாலபுரம் இல்லத்து வாசலில் எதையும் எதிர்பார்க்காமல் தங்கள் தலைவரின் நலத்தை மட்டுமே எதிர்பார்த்துக் காத்துக் கிடந்தனர் தொண்டர்கள். ‘கலைஞர் வாழ்க, கலைஞர் வாழ்க’ என்ற ஒற்றைச் சொல் மட்டுமே அவர்களின் மந்திரமாய் அந்த மண்டலம் முழுதும் ஒலித்துக்கொண்டிருந்தது.

சில மணித் துளிகளில் கோபாலபுரம் மாடி அறையிலிருந்து கருணாநிதியை ஸ்ட்ரெச்சரில் கீழே அழைத்துவந்தனர். தலைவா தலைவா என்று தொண்டர்கள் கதறினார்கள். நள்ளிரவு 1.30 மணி அளவில் ஆம்புலன்ஸில் திமுக தலைவர் கருணாநிதியை காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கே அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.

இரவு 2.30 மணியளவில் காவேரி மருத்துவமனை சார்பில் அதிகாரபூர்வ அறிக்கை வெளியிடப்பட்டது.

அதில், “திமுக தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கருணாநிதி ஜூலை 28 அதிகாலை 1.30 மணியளவில் காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரது ரத்த அழுத்தம் குறைந்ததை அடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மருத்துவர் குழுவினர் அவரது ரத்த அழுத்தத்தை சீராக்கும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர். திமுக தலைவர் தொடர் கண்காணிப்பில் இருக்கிறார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

கருணாநிதி மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார் என்ற தகவல் கிடைத்ததும் ஏராளமான திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனை முன்பு இன்னும் காத்திருக்கிறார்கள்.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018