மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

கருணாநிதி உடல்நிலை: விஷமிகளின் வதந்திகளை நம்பாதீர்!

கருணாநிதி உடல்நிலை: விஷமிகளின் வதந்திகளை நம்பாதீர்!

"திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே விஷமிகள் திட்டமிட்டு பரப்பும் வதந்திகளை நம்ப வேண்டாம்" என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு வீட்டிலிருந்தபடி சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். அவருடைய உடல்நிலை குறித்து அரசியல் தலைவர்களும், முக்கியப் பிரமுகர்களும் ஸ்டாலினிடம் நேரிலும் தொலைபேசியிலும் விசாரித்துவருகின்றனர்.

கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிக்கை வாயிலாகவும், தலைவர்களின் பேட்டி வாயிலாகவும் தெரிவிக்கப்பட்டுவந்தாலும், அவரது உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகிவந்தன.

இதனையடுத்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் (ஜூலை 27) நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில், ”நம் அனைவரின் உயிருக்கும் உயிரான கட்சித் தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பற்றி விஷமிகள் பரப்பும் வதந்திகள் எதையும் அவர்தம் அன்பு உடன்பிறப்புகளான கட்சித் தொண்டர்களும், கட்சி சார்பற்ற முறையில் தலைவரின் உடல்நிலை பற்றி அக்கறையுடன் விசாரித்துவரும் அனைத்துத் தரப்பு மக்களும் நம்ப வேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கருணாநிதிக்கு அளிக்கப்பட்டுவரும் தொடர் சிகிச்சையின் விளைவாக உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுவருகிறது. 24 மணி நேரமும் மருத்துவர்கள் அவரை நன்கு கவனித்து சிகிச்சை அளித்துவருகிறார்கள். மருத்துவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கட்சித் தோழர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க வருவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ள ஸ்டாலின், ”விஷமிகள் திட்டமிட்டுப் பரப்பும் எந்த வதந்திகளுக்கும் செவி மடுக்கவும் வேண்டாம் - அந்த வதந்திகளை நம்பவும் வேண்டாம் என்று தலைமைக் கழகத்தின் சார்பில் மீண்டும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018