மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்!

லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்!

மத்திய தரைவழிப் போக்குவரத்து துறைச் செயலாளருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால், கடந்த 8 நாட்களாக நாடு முழுவதும் நடைபெற்றுவந்த லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

சுங்கச் சாவடிக் கட்டணத்தை ஆண்டுக்கு ஒருமுறை வசூலிக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை மூன்று மாதத்துக்கு ஒருமுறை மட்டுமே மாற்றியமைக்க வேண்டும். டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும். 3ஆம் நபர் காப்பீட்டுக் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள், கடந்த 20ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அதன்படி, நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் லாரிகள் வேலைநிறுத்தம் கடந்த 8 நாட்களாக நடைபெற்றுவந்தது. தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், டிரெய்லர் லாரி உரிமையாளர்கள் சங்கம், சரக்கு புக்கிங் ஏஜெண்டுகள் சம்மேளனம் என பல்வேறு அமைப்பினரும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துக் கலந்துகொண்டனர். வெளி மாநிலங்களுக்கு இரும்பு, ராணுவ வாகனங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் உதிரி பாகங்களை ஏற்றிச் செல்லும் 7 ஆயிரம் ட்ரெய்லர் லாரிகளும், இந்தத் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றன.

இந்த வேலை நிறுத்தத்தில், தமிழகத்தில் 4 லட்சம் லாரிகள் உள்பட நாடு முழுவதும் 90 லட்சம் லாரிகள் இயங்காததால், லாரி உரிமையாளர்களுக்கு ஒரு நாளுக்கு ரூ.4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது. மத்திய அரசுக்கு ஒரு நாளுக்கு ரூ.25 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது.

லாரி வேலை நிறுத்த போராட்டத்தினால் சரக்குகள் தேக்க நிலை ஏற்பட்டு, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்தது. இதனால் உடனடியாக மத்திய அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. ஏற்கனவே மத்திய நிதி அமைச்சர் பியூஸ் கோயலுடன் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் 2 முறை பேச்சுவார்த்தை நடத்தி அது தோல்வி அடைந்தது.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018