மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

கோபாலபுரத்தை நோக்கி டெல்லி!

கோபாலபுரத்தை நோக்கி டெல்லி!

உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்றுவரும் திமுக தலைவர் மு.கருணாநிதியை சந்திக்க, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் இன்று சென்னை வருகிறார். துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவும் சென்னை வரவுள்ளதாகக் கூறப்படுகிறது.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கடந்த சில நாட்களாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கோபாலபுரம் இல்லத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலினிடம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தொலைபேசியில் விசாரித்தார். படப்பிடிப்பில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்தும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்தார். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் எம்.பி டி.கே.ரங்கராஜன், ஐஜேகே தலைவர் பாரிவேந்தர், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் நேற்றிரவு கோபாலபுரம் இல்லத்திற்கு நேரில் சென்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.

டெல்லியில் நேற்று (ஜூலை 27) செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், ”திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் அக்கறை கொண்டுள்ளோம். அவர் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறோம். நாளை (இன்று) காலை நானும், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கும் சென்னை சென்று கருணாநிதியின் உடல்நிலை குறித்து நலம் விசாரிக்க உள்ளோம். கட்சி சார்பின்றி நாடு முழுவதும் மதிக்கப்படும் தலைவர் கருணாநிதி. நாட்டின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர். சோனியா, ராகுல், மன்மோகன் சிங் ஆகியோரிடம் மிகவும் நெருக்கமாக உள்ளவர். 100 சதவிகிதம் அவர் விரைவில் குணமாவார்” என்று தெரிவித்துள்ளார்.

கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று சென்னை வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018