மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

கௌரி லங்கேஷ்க்கு முன் திட்டமிடப்பட்ட நபர்!

கௌரி லங்கேஷ்க்கு முன் திட்டமிடப்பட்ட நபர்!

கௌரி லங்கேஷ் கொலைக்கு முன், முதலாவதாக கொலை செய்யத் திட்டமிடப்பட்ட நபராக நடிகர் கிரிஷ் ரகுநாத் கர்னாட் பெயர் பட்டியலில் இருந்திருக்கிறது என்று சிறப்பு புலனாய்வு துறை அதிகாரிகள் சமீபத்தில் தெரிவித்துள்ளனர்.

கௌரி லங்கேஷ் என்ற ஊடகவியலாளர் கர்நாடகாவில் அடையாளம் தெரியாத நபர்களால் செப்டம்பர் 5ஆம் தேதி, 2017ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

கௌரி லங்கேஷுடன் நெருங்கிய நட்பில் இருந்த நடிகர் பிரகாஷ்ராஜ் இந்த சம்பவத்திற்கு கடுமையான கண்டங்களை தெரிவித்து வந்தார். குற்றவாளிகளை பிடித்து கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார். இந்த சம்பவம் குறித்து கர்நாடக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்திய நிலையில், இந்தக் கொலை தொடர்பாக பரசுராம் வாக்மோரே, அமோல் காலே, நவின்குமார், அமித்தேக்வேகர் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் அமோல் காலே என்பவரிடமிருந்து, இவ்வழக்கு சம்பந்தமான மிக முக்கிய நாட்குறிப்பினை கைப்பற்றியிருக்கிறார்கள் காவல் துறையினர்.

அந்நாட்குறிப்பில் 34 நபர்கள் கொண்ட பட்டியலை அந்நபர் எழுதி வைத்துள்ளார். அந்தப் பட்டியலில் 2ஆம் இடத்தில் கௌரி லங்கேஷ் இடம் பெற்றுள்ளார். முதலாவது இடத்தில் திரைத்துறையில் புகழ்பெற்று விளங்கும் கிரிஷ் ரகுநாத் கர்னாட் அவரின் பெயர் இடம் பெற்றுள்ளது. தமிழில் ரட்சகன், மின்சாரக் கனவு, காதலன் போன்ற திரைப்படங்களில் நடித்தவர் கிரிஷ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான நபர்கள் கர்நாடகா மற்றும் மகாராஷ்ட்ரா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இப்பட்டியலில் இடம் பெற்றவர்கள் அனைவருக்கும் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாட்குறிப்பில் இடம்பெற்றுள்ள பெயர்கள்

இவர்களின் நாட்குறிப்பில் இரண்டு தனித்தனி தாள்களில் மொத்தம் 34 நபர்களின் பெயர்கள் இடம் பெற்றிருக்கிறது. ஒரு பெரிய கலந்தாலோசனைக்குப் பிறகு இவர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டிருக்கிறது. 26 வயது மதிக்கத்தக்க பரசுராம் என்பவரை, கௌரி லங்கேஷை கொலை செய்ய ஏற்பாடு செய்து, அவருக்குப் பயிற்சிகள் அளிக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் கௌரி லங்கேஷினை கொலை செய்ய சுமார் 8 மாத காலங்கள் திட்டம் தீட்டியிருந்தினர்.

காலே, மற்றும் அவரின் கூட்டாளிகளை கைது செய்த இரண்டு மாதங்களுக்குள், பட்டியலில் இடம் பெற்றிருந்த மற்றொரு நபரான பேராசிரியர் கே.எஸ் பகவானை மைசூரில் கொலை செய்திருக்கிறார்கள். இப்பட்டியலில் கன்னட எழுத்தாளர்கள் யோகேஷ் மாஸ்டர், சந்திரசேகர் பட்டில், பனஜகரே ஜெயபிரகாஷ் ஆகியோர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன. இப்பட்டியலில் த்வாரகாந்த் என்ற கர்நாடக பிற்படுத்தப்பட்ட இனத்தவர்களுக்கான கமிசன் சேர்மென், பரகூர் ராமச்சந்திரப்பா, பட்டில் புட்டப்பா, சென்னவீரா கனவி, நடராஜ் ஹுலியார், நரேந்திர நாயக், ஜம்தர் ஆகியோர்களின் பெயர்களும் இடம் பெற்றிருக்கிறது.

இது தொடர்பாக என்டிடி-விக்கு கிரிஷ் ரகுநாத் கர்னாட் அளித்துள்ள பேட்டியில், “இதில் எனக்குப் பெரிதாக ஆர்வமில்லை, நன்றி” என்று கூறியுள்ளார்.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018