மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

வேதாந்தா: ஸ்டெர்லைட்டைத் திறக்கத் தீவிரப் பேச்சுவார்த்தை!

வேதாந்தா: ஸ்டெர்லைட்டைத் திறக்கத் தீவிரப் பேச்சுவார்த்தை!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தீவிரப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருவதாக வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுற்றுப்புறச் சூழல் மற்றும் மக்களின் உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கக் கூடிய ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி மக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் கலவரத்தில் முடிந்து, 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து, மே 28 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடத் தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதையடுத்து, ஆலைக்கும் சீல் வைக்கப்பட்டது.

ஆனால், ஸ்டெர்லைட் ஆலைப் பராமரிப்பு பணி காரணமாக மார்ச் மாத இறுதியில் மூடப்பட்டது. நிறுவனத்தின் ஒப்புதலுக்கான வருடாந்தரப் புதுப்பித்தலின் காரணமாக இந்தப் பணி நிறுத்தம் மேலும் நீட்டிக்கப்பட்டிருந்தது. ஸ்டெர்லைட் நிறுவனம் குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு இணங்கவில்லை என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் மனுவை நிராகரித்துவிட்டது என அதன் வருடாந்தர அறிக்கை 2017-18இல் தெரிவித்துள்ளது.

இதையடுத்து மக்கள் போராட்டத்தால் ஆலை நிரந்தரமாக மூடப்பட்டது. தற்போது, ஆலையை மீண்டும் திறப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018