மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

படங்களைத் தீர்மானிப்பது ரசிகர்களே!

படங்களைத் தீர்மானிப்பது ரசிகர்களே!

'அடல்ட்ஸ் ஒன்லி' ரகத்தில் படமெடுப்பதும் எடுக்காததும் ரசிகர்களின் கையில்தான் உள்ளது என இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் கூறியுள்ளார்.

ஹரஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய அடல்ட்ஸ் ஒன்லி ரகப் படங்களை இயக்கிய சந்தோஷ்.பி.ஜெயக்குமார் அந்த ரகத்திலிருந்து விலகி கஜினிகாந்த் என்னும் படத்தை இயக்கிவருகிறார். ஆர்யா நடிக்கும் இந்தப் படத்தில் கதாநாயகியாக சாயிஷா நடித்துள்ளார். இயக்குநரின் மற்ற படங்களுக்குத்தான் பிரச்சினை வந்தது, இதற்கு வராது என படக்குழு நினைத்திருக்கும். ஆனால் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்குக்கு எதிராகவே பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

கஜினிகாந்த் என்னும் டைட்டில் ரஜினிகாந்தை இழிவு செய்வதுபோல இருப்பதாகவும், உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்தின் பிறந்தநாளில் இந்த கஜினிகாந்த் போஸ்டரை வெளியிட்டு இருப்பது அவரை கேலி செய்வதுபோல உள்ளது எனவும் கூறி அப்போது சில ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில், நேற்று (ஜூலை 27) இந்தப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய இப்பட இயக்குநர், “இருட்டு அறையில் முரட்டு குத்து படம் இயக்கியபோதே,‘கஜினிகாந்த்’ பட வேலைகளையும் ஆரம்பித்துவிட்டோம். காலையில் ஒரு பட ஷூட்டிங், மாலையில் மற்றொன்று எனத் திட்டமிட்டு வேலைகளை முடித்தோம். என்னுடைய இந்த முயற்சிக்கு ஒத்துழைத்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் என் நன்றி.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018