மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

வரிக் குறைப்பால் அரசுக்கு இழப்பு!

வரிக் குறைப்பால் அரசுக்கு இழப்பு!

ஜிஎஸ்டியில் மேற்கொள்ளப்பட்டுள்ள வரிக் குறைப்பால் அரசுக்கு ரூ.70,000 கோடி வரையில் இழப்பு ஏற்படும் என்று அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

ஜூலை 21ஆம் தேதி டெல்லியில் நடந்த கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பொருட்களின் வரியை ஜிஎஸ்டி கவுன்சில் குறைத்தது. ஒட்டுமொத்தமாக ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது முதல் இப்போது வரை 384 பொருட்களின் வரியை ஜிஎஸ்டி கவுன்சில் குறைத்துள்ளது. இதன்மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.70,000 கோடி வரி வருவாய் குறையுமென்று ஒன்றிய அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜூலை 27ஆம் தேதி அவர் தனது முகநூல் பதிவில், “தற்போது சிமெண்ட், ஏசி, எல்.இ.டி டிவி, போன்ற சில ஆடம்பரப் பொருட்கள் மட்டும்தான் அதிகபட்ச வரிவிதிப்பான 28 விழுக்காடு வரி வளையத்திற்குள் உள்ளன. ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு முன்பு பெரும்பாலான வீட்டு உபயோகப் பொருட்கள் 31 விழுக்காடு வரி வளையத்தில் இருந்தன. அது காங்கிரஸ் கட்சி காலங்காலமாகப் பின்பற்றி வந்த வரி முறை.

ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்த 36 மாதங்களில் இந்தச் சாதனையை படைத்துள்ளோம். ஜிஎஸ்டி கவுன்சில் கிட்டத்தட்ட 28 விழுக்காடு வரியை நீக்கிவிட்டது என்றே சொல்லலாம். இந்த வரிக் குறைப்பால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.70,000 கோடி வரையில் வரி வருவாய் குறையும். ஆனால் மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டிக்கு முன்பிருந்த வரி வருவாயை விட இப்போது 14 விழுக்காடு அதிகமாகக் கிடைக்கும். சுதந்திரத்துக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய வரி சீர்திருத்தம் இதுதான். எனவே இதைக் கொண்டாடும் நேரம் இது” என்று குறிப்பிட்டுள்ளார்.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018