மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

தமிழில் படித்தோருக்கு இடஒதுக்கீடு மறுப்பதா?

தமிழில் படித்தோருக்கு இடஒதுக்கீடு மறுப்பதா?

தமிழக சட்டக் கல்லூரிகளில் தமிழில் படித்தவர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படுவதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அரசு சட்டக்கல்லூரிகளில் 186 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆள்தேர்வில், தமிழில் படித்தவர்களுக்கான 20 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படாது என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழில் படித்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் அரசாணையில் உள்ள ஓட்டையைப் பயன்படுத்தி தமிழில் படித்தவர்களுக்கு இடஒதுக்கீட்டை மறுப்பது கண்டிக்கத்தக்கது” என்று குறிப்பிட்டுள்ளார்.

“உதவி சட்டப் பேராசிரியர் பணிக்கு குறைந்தபட்சக் கல்வித்தகுதி சட்ட மேற்படிப்பு ஆகும். ‘தமிழகத்தில் முதுநிலை சட்டப்படிப்பு தமிழ் மொழியில் இல்லை என்பதால், எவருமே தமிழ் மொழியில் படித்திருக்க வாய்ப்பில்லை. எனவே, இந்த பணிக்கு தமிழில் படித்தோருக்கான இடஒதுக்கீடு வழங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்று ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் எந்த பணியாக இருந்தாலும் அதில் தமிழில் படித்தவர்களுக்கு 20சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசாணை எண் 145 பிறப்பிக்கப்பட்டது” என்று சுட்டிக்காட்டிய ராமதாஸ், பெரும்பாலான அரசு வேலைகளுக்கு பட்டப்படிப்பு அல்லது அதற்கும் குறைவான படிப்பு தான் குறைந்தபட்ச கல்வித் தகுதி என்பதால் அப்படி ஓர் அரசாணை பிறப்பிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

அதற்கும் கூடுதலான கல்வித்தகுதி கொண்ட வேலைவாய்ப்புகள் குறித்து அப்போது யாரும் சிந்திக்காததால் அதுபற்றி அரசாணையில் குறிப்பிடப்படவில்லை. இத்தகைய சூழல்களில் அதுகுறித்து சட்ட வல்லுனர்களிடம் கருத்துக் கேட்டு முடிவு எடுப்பது தான் சரியானதாகும்” என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ள ராமதாஸ், அதற்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் விடையளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018