மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?

இன்னும் எத்தனை நாளுக்குத் தாக்குப்பிடிக்கும்?

“விவசாயம் என்பது வியாபாரம் அல்ல. விவசாயம் என்பது வாழ்க்கைமுறை.”

- ஜே.சி.குமரப்பா

கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதுதான் உண்மையான வளர்ச்சி என்றார் குமரப்பா. ஏனென்றால் கிராமப் பொருளாதாரம்தான் தற்சார்புப் பொருளாதாரம். உணவுக்காகச் சம்பாதிக்க வேண்டும் என்ற நிலைமையே யாருக்கும் இருந்ததில்லை. ஒரு கிராமத்தில் இருக்கும் எல்லா வீடுகளிலும் சிறிய அளவிலாவது விவசாயம் நடந்துகொண்டிருக்கும். தங்களுக்குத் தேவையான காய்கறிகளையாவது தங்களது தோட்டத்தில் விளைவித்துக்கொண்டிருந்தனர். கால்நடைகள் இல்லாத வீடுகளே கிராமங்களில் இருந்தது கிடையாது. இவை அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துவிடும்.

அடிப்படையைத் தாண்டிய தேவைகளுக்குத்தான் வேலை செய்ய வேண்டியிருந்தது. இந்தத் தற்சார்பு நிலையைச் சிதைத்து, இப்போது காய்கறிகள் வாங்குவதற்கே தனியாகச் சம்பாதிக்க வேண்டும் எனும் நிலைமையை உண்டுபண்ணியதுதான் பசுமைப் புரட்சியின் ஆகச் சிறந்த சாதனை.

தற்சார்புப் பொருளாதாரத்தின்போது கிராமங்களில், 2 ஏக்கர் பரப்பளவில் 20 விழுக்காடு உற்பத்தி நடந்துவந்தது. அதுவே அந்தப் பகுதியின் நுகர்வுக்குப் போதுமானதாக இருந்தது. பசுமைப் புரட்சிக்குப் பிறகு 2 ஏக்கர் பரப்பளவில் 50 விழுக்காடாக உற்பத்தி அதிகரித்தது. 20 விழுக்காடு போதுமென்றிருந்த இடத்தில் 50 விழுக்காடு பொருள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஆனால், நுகர்வு சந்தையோ சராசரி நிலையைவிட அதிகபட்சமாக 10 விழுக்காடுதான் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் உற்பத்திப் பொருள் தேக்கம் அடைகிறது, விலை சரிகிறது, உற்பத்திப் பொருள் வீணாகிறது.

இந்நிலையைத் தாக்குப்பிடிக்க முடிந்தவர்கள் மட்டுமே தொடரந்து அடுத்த உற்பத்திக்குத் தயாராவார்கள். இதில் நஷ்டமைடையும் சாமானியர்கள் அடுத்த போகத்திற்கு மீள்வது சிரமம்.

இதே நிலை தொடரும்போது, பெரும்பாலானோர் உற்பத்தியை விட்டு வேறு தொழிலுக்கு நகர்ந்து செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலை எதுவரை நீடிக்குமென்றால், அந்த 2 ஏக்கர் நிலம் தனது உற்பத்தித் திறனை எதுவரை அப்படியே வைத்திருக்கிறதோ அதுவரை 50 விழுக்காடு உற்பத்தி நடக்கும். நுகர்வு பூர்த்தி செய்யப்படும்.

ஆனால், அந்த 2 ஏக்கர் நிலம், இதே ராசாயன முறையில் எத்தனை நாட்களுக்கு அதே 50 விழுக்காடு உற்பத்தியைத் தரும்?

இங்கேதான் பிரச்சினை ஆரம்பமாகிறது….

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018