மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

ஊழியர்களே வந்து குப்பைகளை சேகரிப்பார்கள்!

ஊழியர்களே வந்து குப்பைகளை சேகரிப்பார்கள்!

ரயில் பயணிகளிடம் ஊழியர்களே நேரில் சென்று குப்பைகளை வாங்கும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என ரயில்வே வாரிய தலைவர் அஷ்வானி லோஹானி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ரயில்வே துறையின் அனைத்துக் கோட்ட உயர்மட்ட அதிகாரிகள், ரயில்வே வாரிய உறுப்பினர்கள் கூட்டம் நேற்று (ஜூலை 27) நடைபெற்றது. இதையடுத்து, பேசிய ரயில்வே வாரிய தலைவர் அஷ்வானி லோஹானி, உணவு முதல் டாய்லெட் வரை விமானத்தில் உள்ளதுபோன்று, ரயில்களிலும் மாற்றம் செய்யப்பட்டுவருகிறது.

ரயில்களில் சாப்பிடும் பயணிகள் சாப்பிட்ட பிறகு, தட்டைச் சீட்டுக்கு அடியில் வைத்துவிட்டுச் செல்கின்றனர். சில சமயங்களில் இது தரையில் கொட்டிவிடுகிறது. மேலும், வாழைப்பழத் தோல், கவர்கள் ஆகியவற்றை அப்படியே விட்டுச் செல்கின்றனர். இதனால், அந்தப் பெட்டி குப்பையாக இருக்கிறது. இதைத் தவிர்ப்பதற்குத்தான், விமானப் பயணத்தில் குப்பைகளை ஊழியர்கள் சேகரிப்பதுபோன்று, இனி ரயில் பயணங்களின்போது, சாப்பாட்டுக்குப் பிறகு குப்பைப் பொருட்களை சேகரிக்க ஊழியர்கள் வருவார்கள்.

ஒவ்வொரு பயணிகளிடத்திலும் வந்து குப்பையைப் பெற்றுச் செல்வார்கள். பயணிகள் சாப்பிட்ட பின் வைத்திருக்கும் ட்ரே, தட்டுகள் அல்லது எந்த குப்பைகளானாலும் அவற்றை சேகரித்துச் செல்வார்கள்.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018