மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

தண்ணீர், காற்று, நிலம்: பாதுகாப்பது எப்படி?

நண்பர்களே, இதுவரை நாம கத்துகிட்ட பாடமெல்லாம் புரிதலுக்கானவை. ‘கற்ற பின் நிற்க அதற்குத் தக’னு வள்ளுவர் தாத்தா சொல்லிருக்காரு இல்லையா? அதாவது, கத்துக்கிட்டதை நாம் நம்ம வாழ்க்கைல கடைப்பிடிக்கணும். இது நாம செயலில் இறங்க வேண்டிய நேரம்.

ஒரு சின்ன ஃபிளாஷ்பேக்

முதல்ல ஒரு சின்ன ஃபிளாஷ்பேக் பாத்துடலாமா?

பூமியில உயிர்களின் வாழ்க்கைக்கு ஆதாரம் மூன்று பேருயிர்கள்: காற்று, நீர், நிலம். இவை மூன்றோட பிணைப்புல வாழ்ந்துட்டிருக்க சிற்றுயிர்கள்தான் நாம். இதை உணராம, இயற்கையை சுரண்டினதோட விளைவுகளை இப்போ நாம அனுபவிச்சிட்டு இருக்கோம்.

அறிவு என்பதே உலகம் இயங்கும் விதத்தை புரிஞ்சிகிட்டு இயற்கையோட இணைஞ்சு நம்ம தேவைகளைப் பூர்த்தி செஞ்சுக்கிறதுக்குதான்.

இந்த மூணு பேருயிர்களின் சீர்குலைவை எப்படி சரி பண்னலாம் என்கிற செயல்திட்டத்துல இறங்குவோம்.

செயல்முறை

தண்ணி, காத்து, பூமி - இது மூன்றையும் எவ்வளவு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஆனால் எந்த விதத்திலும் மாசுபடுத்துதல் கூடாது.

விளக்கம்

தேவைக்காக உபயோகப்படுத்துறது - பயன்படுத்துதல்.

சுயநலத்துக்காகப் பிடுங்குவது - மாசுபடுத்துதல்.

இந்த வித்தியாசங்களைப் புரிந்துகொள்ள, ஒவ்வொரு பேருயிரையும் தனித்தனியா பாப்போம்...

- நரேஷ்

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018