மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

வளர்ச்சிக்குத் தடையாகக் கச்சா எண்ணெய்!

வளர்ச்சிக்குத் தடையாகக் கச்சா எண்ணெய்!

உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரங்களில் இந்த ஆண்டில் இந்தியா முன்னிலையில் இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும், எனினும் இந்த வளர்ச்சிக்குக் கச்சா எண்ணெய் விலை உயர்வு சவாலாக இருக்கும் எனவும் பொருளாதார நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

2 லட்சம் கோடி டாலர் மதிப்புடைய இந்தியப் பொருளாதாரம் சமீபத்தில் ஃபிரான்ஸ் நாட்டைப் பின்னுக்குத் தள்ளி உலகின் மிகப் பெரிய பொருளாதாரங்களுக்கான பட்டியலில் ஆறாவது இடத்துக்கு முன்னேறியிருந்தது. மேலும், இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.4 சதவிகிதமும், அடுத்த 2019-20 நிதியாண்டில் 7.6 சதவிகிதமும் வளர்ச்சி காணும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டில் பொதுத் தேர்தல் இந்தியாவில் வரவிருப்பதால் அரசின் செலவுகள் அதிகமாக இருக்கும் என்ற அடிப்படையில் இந்தியப் பொருளாதாரம் மிக வேகமான வளர்ச்சியைக் கொண்டிருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.

ராய்டர்ஸ் நிறுவனம் சார்பாக ஜூலை 19 முதல் 24 வரையில் இது தொடர்பாக 70 பொருளாதார வல்லுநர்களிடையே கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் சீனாவின் வளர்ச்சி விகிதம் இந்த ஆண்டில் 6.6 சதவிகிதமாக இருக்கும் எனவும் கணித்துள்ளனர். எனினும், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை அதிகரித்து வருவதாலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதாலும் இந்தியாவின் வேகமான வளர்ச்சி சற்று சவாலான ஒன்றாகவே இருக்கும் என்று அவர்கள் கருதுகின்றனர்.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018