மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

அதிமுகவின் பரிணாம வளர்ச்சியே அமமுக: தினகரன்

அதிமுகவின் பரிணாம வளர்ச்சியே அமமுக: தினகரன்

அதிமுகவின் பரிணாம வளர்ச்சியாக அமமுக வளர்ந்துவருவதாக அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 3ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரத்தின் பேக்கரும்பில் உள்ள அவரது நினைவிடத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுச்செயலாளரும் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரன் நேற்று (ஜூலை 27) மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் ராமதாதபுரத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தினகரன். “நான் முன்பே கூறியது போல் திமுகவுடனும பாஜகவுடன் கூட்டணி கிடையாது. அவர்களும் எங்களிடம் கூட்டணி கேட்டு வர மாட்டார்கள். தமிழ்நாட்டில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தலைமையில் சிறந்த கூட்டணி அமையும். 40 தொகுதிகள் லட்சியம், 37 தொகுதிகள் நிச்சயம் என்ற இலக்கை நோக்கி முன்னேறிக்கொண்டு இருக்கிறோம்.

துரோகிகளை நீக்கிவிட்டு உண்மையான தொண்டர்கள் இங்கே வந்தால் அவர்களை இணைந்துக்கொள்வோம். அதிமுகவின் பரிணாம வளர்ச்சியாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளது. தமிழகத்தில் உள்ள இளைஞர்களில் 70 சதவிகிதத்துக்கும் மேலானவர்கள் அமமுகவில் உறுப்பினர்களாக உள்ளனர்.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018