மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

கருணாநிதி: நலம் விசாரித்த தலைவர்கள்!

கருணாநிதி: நலம் விசாரித்த தலைவர்கள்!

திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், குலாம் நபி ஆசாத், தினகரன் உள்ளிட்டோர் அவரது உடல்நிலை குறித்து நேரில் நலம் விசாரித்தனர்.

கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க காங்கிரஸ் மூத்தத் தலைவரும், கருணாநிதியின் நெடுநாள் நண்பருமான குலாம் நபி ஆசாத் இன்று காலை காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்தார். அவருடன் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோரும் வந்திருந்தனர். ஸ்டாலின், கனிமொழி ஆகியோரிடம் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்த குலாம் நபி ஆசாத், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குலாம் நபி ஆசாத், ”திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக சென்னை வந்தோம். கருணாநிதி தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதால் நாங்கள் அவரை சந்திக்கவில்லை. அவரது உடல்நிலை குறித்து ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களிடம் நலம் விசாரித்தோம். கருணாநிதிக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தோம். அவர் நன்றாக இருக்கிறார், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விரைவில் உடல்நலம் பெற வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன். இன்னும் சில நாட்களில் அவர் வீடு திரும்பிவிடுவார் என்று நான் உறுதியாக தெரிவிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரைத் தொடர்ந்து நலம் விசாரிக்க வந்த பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருணாநிதியின் சிகிச்சை விவரங்கள் குறித்து, ஸ்டாலினிடம் கேட்டறிந்தார். அவருடன் பாஜக மாநிலச் செயலாளர் வானதி சீனிவாசனும் வருகை தந்திருந்தார்.

மதுரையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன், அங்கிருந்து நேராக காவேரி மருத்துவமனைக்குச் சென்று கருணாநிதியின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்தேன். தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் குணமடைந்துவிடுவார் என்று அவர் என்னிடம் கூறினார். கருணாநிதி குணமடைந்து வர வேண்டும் என பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இசை அமைப்பாளர் இளையராஜா ஆகியோரும் காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நலம் விசாரித்தனர்.

மதியம் 2மணியளவில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் மருத்துவமனையிலிருந்து புறப்பட்டுச் சென்றனர். மாலை 5.30 மணியளவில் ஸ்டாலின் மீண்டும் மருத்துவமனைக்கு வந்தார்.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018