மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

மாணவி கிண்டல்: ஒருவர் கைது!

மாணவி கிண்டல்: ஒருவர் கைது!

கேரளாவில் மீன் விற்ற மாணவியை சமூக வலைதளத்தில் பகடி செய்த விவகாரம் தொடர்பாக, வயநாட்டை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சூரைச் சேர்ந்த மாணவி ஹனான், கொச்சியில் மனநலம் குன்றிய தாயாருடன் வசித்து வருகிறார். தன்னுடைய குடும்பம், படிப்பு ஆகிய இரண்டையும் தானே பார்த்து கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட ஹனான், கல்லூரி முடிந்த பிறகு மாலையில் மீன் விற்று வாழ்க்கையை நடத்தி வருகிறார். இதுதான் ,தற்போது அவருக்கு கை கொடுத்து வருகிறது.

மாத்ருபூமி என்ற மலையாள நாளிதழில் இவருடைய வாழ்க்கை கதையை, கட்டுரையாக வெளியிட்டிருந்தது. இவர் மீன் விற்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதை பார்த்த நெட்டிசன்கள்,இவரை கேலியும்,ட்ரோலும் செய்துள்ளனர். இன்னும் சிலர், இந்த கதை பொய் என்று வதந்தி பரப்பியுள்ளனர்.

இதையடுத்து, மாணவி படிக்கும் கல்லூரியின் முதல்வரும், மாணவர்களும் இந்த கதை உண்மையானது என தெரிவித்துள்ளனர். கேரள மத்திய அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ் மற்றும் கேரள முதல்வர் பினராய்விஜயன் ஆகியோர் மாணவிக்கு ஆதரவாக தங்களது கருத்தை தெரிவித்தனர். இது தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள முதல்வர் தெரிவித்திருந்தார்.

சமூக வலைதளத்தில் மாணவியை விமர்சனம் செய்தது தொடர்பாக சைபர் க்ரைம் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நூருதீன் ஷேக் என்ற நபரை போலீசார் கைது செய்தனர். இவர் வயநாட்டை சேர்ந்தவர். இதில், தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018