மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 28 ஜூலை 2018

கிச்சன் கீர்த்தனா: திருப்பத்தூர் நாட்டுக்கோழி சிக்கன் 65

கிச்சன் கீர்த்தனா: திருப்பத்தூர் நாட்டுக்கோழி சிக்கன் 65

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில், கிருஷ்ணகிரி சாலையில் ஜோய் ஆலுக்காஸ் எதிரில் சிறிய நான்கு சக்கர தள்ளுவண்டிக் கடை ஒன்றில் இந்த ஸ்பெஷல் நாட்டுக்கோழி சிக்கன் 65 தினமும் கிடைக்கும். இதன் சுவையை அனுபவித்தால்தான் தெரியும். நாவின் சுவை நரம்புகள் அனைத்தும் நர்த்தனம் ஆடும். இதை எப்படி நம்ம வீட்டில் செய்யலாம் என்று இந்த வார சண்டே ஸ்பெஷலாகப் பார்க்கலாம் வாங்க..

தேவையான பொருட்கள்

ஊறவைக்க

நாட்டுக்கோழி எலும்புடன் - 1 கிலோ (சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்)

உப்பு - தேவைக்கேற்ப

வரமிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ்பூன்

மிளகு தூள் - 2 டீ ஸ்பூன்

சின்ன வெங்காயம் - 14 ( விழுதாக நைசாக அம்மிகல்லில் அரைத்தது )

இஞ்சி - பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா தூள் - 1 டீ ஸ்பூன்

அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்

மைதா மாவு - 2 டேபிள் ஸ்பூன்

தக்காளி விழுது - 2 டேபிள் ஸ்பூன்

நாட்டுக்கோழி முட்டை - 4

மரசெக்கு கடலெண்ணய் பொரிப்பதற்குத் தேவையான அளவு (இதில் பொரித்தால் கூடுதல் சுவையாக இருக்கும்)

ட்ரை செய்ய

பொரிக்க மரசெக்கு கடலெண்ணய் - 4 டேபிள் ஸ்பூன்

இஞ்சி - பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் - 7 ( பொடியாக நறுக்கியது)

பெரிய வெங்காயம் -1 ( பொடியாக நறுக்கியது)

கறிவேப்பிலை - 2 கொத்து

தயிர் - 200 மில்லி

காஷ்மீரி வரமிளகாய் தூள் - 1 டீ ஸ்பூன்

கொத்தமல்லி தூள் -1 டீ ஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப

தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை

நாட்டுக்கோழித் துண்டுகளைச் சுத்தமாகக் கழுவி எடுத்து வைக்கவும். ஊறவைக்கக் கொடுத்துள்ள பொருட்களில் மரசெக்கு கடலெண்ணய் தவிர மற்ற அனைத்து பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து நன்றாகப் பிசிறிக்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் 3 மணிநேரம் ஊறவைத்துக்கொள்ளவும். ஒரு துளிக்கூடத் தண்ணீர் சேர்க்கக் கூடாது. தேவைக்கேற்ப நாட்டுக்கோழி முட்டையைச் சேர்த்துக்கொள்ளலாம்.

இப்பொழுது, இரும்பு வாணலியில் மரசெக்கு கடலெண்ணய் விட்டு நன்றாக காய்ந்ததும் நன்றாகப் பிசிறி ஊறவைத்தள்ள நாட்டுக்கோழித் துண்டுகளைப் போட்டு, சிறு தீயில் வைத்து முறுகலாக, பொன்னிறமாக, வேகவைத்து எடுத்து எண்ணெய் வடியவிடவும்.

இப்பொழுது இரும்பு வாணலியை அடுப்பில் வைத்து அதில் பொரித்த மரசெக்கு கடலெண்ணய் விட்டு நன்றாக காய்ந்ததும் அதில் பொடியாக நறுக்கிவைத்துள்ள பெரிய வெங்காயத்தைச் சேர்த்துப் பொன்னிறமாக வதக்க வேண்டும். அதனுடன் இஞ்சி - பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.

பிறகு, அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும். அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள கறிவேப்பிலையைச் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

அதில் தயிரைச் சேர்த்து நன்றாக, சிறு தீயில் கொதிக்கவிட்டு வதக்கவும். அதில் காஷ்மீரி வரமிளகாய் தூள், கொத்தமல்லித் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.

இப்பொழுது அதில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அதில், முறுகலாக வறுத்து வைத்துள்ள நாட்டுக்கோழித் துண்டுகளைச் சேர்த்து நன்றாக மசாலாவில் கிளறவும்.

மசாலா அனைத்துத் துண்டுகளிலும் படும்படி நன்றாகக் கிளறி, சிறிது நேரம் வேகவிட்டு கறி உடைந்துவிடாமல் கிளறி, பொடியாக நறுக்கிவைத்துள்ள கொத்தமல்லி இலைகளைத் தூவி இறக்கவும்.

சுவையான நாட்டுக்கோழி சிக்கன் 65 ரெடி! இதை, எலுமிச்சம்பழம், பொடியாக நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றுடன் சேர்த்துப் பரிமாறவும்.

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

2 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: கறுப்பு உளுந்துப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

4 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

சனி 28 ஜூலை 2018