மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 27 ஏப் 2018

எப்படி இருந்த தமிழ் சினிமா தெரியுமா?

எப்படி இருந்த தமிழ் சினிமா தெரியுமா?

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 58

இராமானுஜம்

சினிமா வியாபாரம் நடிகனின் முகத்தை நம்பிச் செய்யப்படுகிறது. அதன்பிறகு தான் கதை, உடன் நடிப்பவர்கள், தயாரிப்பு நிறுவனம், இயக்குநர் யார் என்பது கவனத்தில் கொள்ளப்படும்.

கதாநாயகனுக்கு எனக் குறைந்தபட்ச விலை இயக்குநர், இசை, தயாரிப்பு நிறுவனம் இவற்றை பொறுத்துப் படத்தின் வியாபாரம் நடைபெறும்.

தயாரிப்பாளருக்கும் விற்பனையாளருக்குமான உறவு சங்கிலித் தொடர் போன்றது. இதில் எங்கேயாவது ஒரு கண்ணி அறுபட்டால் அனைத்தும் மாறும். இயற்கைக்கு எதிராக மனிதன் செயல்பட்டதன் விளைவு, புவி வெப்பமயமாகி வருகிறது. காட்டுக்குள் இருந்த கொடிய மிருகங்கள் மனிதன் வாழும் சமவெளிப்பகுதிக்குள் நடமாடத் தொடங்கிவிட்டன. அதுபோல்தான் தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தருக்குமான சங்கிலித் தொடர் சேதப்பட தொடங்கி ஒரு கட்டத்தில் கண்ணி அறுபட்டு துண்டானதால் திரைப்பட தயாரிப்பு தயாரிப்பாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்து நடிகர்கள், இயக்குநர்கள் கட்டுப்பாட்டுக்குள் போனதன் விளைவுதான் இன்றைக்குத் தமிழ் சினிமா சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு முழு முதல் காரணம் எனலாம்.

எம்.ஜி.ஆர் - சிவாஜி காலத்தில் பலம் பொருந்தியவர்களாக வளரத் தொடங்கிய திரைப்பட விநியோகத்துறை ரஜினி - கமல் காலத்தில் விஸ்வரூபமெடுத்தது. நடிகர்களுக்கு அட்வான்ஸ் கொடுத்து உறுதிப்படுத்துவது மட்டுமே தயாரிப்பாளர்களின் வேலையாக இருந்திருக்கிறது. படப்பிடிப்பு தொடங்கிய பின்பு விநியோகஸ்தர்கள் தவணை முறையில் ஏரியா அடிப்படையில் படப்பிடிப்பை முடிக்க பணம் கொடுத்துள்ளார்கள். இதனால் படத்திற்கான மூலதனக் கடன், அதற்கான வட்டி என்கிற அதிக சுமை தயாரிப்பாளருக்கு இல்லை என்பதால் படங்களின் விலை குறைந்தபட்ச லாபத்துடன் விநியோகஸ்தர்களுக்கு கிடைத்தது. அதன் தொடர்ச்சியாக தியேட்டர்களும் அதன் பலனை அனுபவித்தன. குறைந்த விலையில் டிக்கெட், அதிக பார்வையாளர்கள் என்று சினிமா ஆரோக்கியமாக இருந்தது.

வாங்கிய விலைக்கு வசூல் ஆகாமல் நஷ்டம் ஏற்பட்டாலும் அதைச் சுகமான சுமையாக விநியோகஸ்தர்கள் ஏற்றுக்கொள்ளும் தன்மை இருந்தது. அதே தயாரிப்பாளர் அடுத்து படம் தயாரிக்கும் போது நஷ்டப்பட்ட விநியோகஸ்தருக்கு விலை குறைத்து தரும் நாணயமான போக்கு தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்களிடம் இருந்தது.

ஏவி.எம், விஜயா வாஹினி, தேவர் புரொடக்‌ஷன்ஸ், கவிதாலயா போன்ற பாரம்பரியம் மிக்க தயாரிப்பு நிறுவனங்கள் ரஜினி, கமல்ஹாசன் இருவரும் உச்சத்தைத் தொட்ட வரை தயாரிப்பு தொழில் செய்து வந்தனர். இவர்கள் இருவரும் இரண்டு வருடங்களுக்கு ஒரு படம் நடிப்பது என்கிற முடிவுக்கு வந்தபோது, விநியோகஸ்தர்களுக்கான படங்கள் குறையத் தொடங்கியது. அஜித் குமார், விஜய் இருவரும் வளரத் தொடங்கிய போது தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் கட்டுப்பாட்டில் இருந்த சினிமா, மசாலா ஹீரோக்கள் கட்டுப்பாட்டுக்குப் போனதால் விநியோகஸ்தர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளானார்கள். அதனால் தயாரிப்பு துறையில் ஏற்பட்ட நெருக்கடிகள், மாற்றங்கள் என்ன? நாளை காலை 7 மணி

குறிப்பு: இராமானுஜம் எழுதும் தொடர் குறித்த நாகரிகமான விமர்சனங்களும், மாற்றுப் பார்வைகளும் வரவேற்கப்படுகின்றன. அவை இத்தொடரின் இடையிடையே பிரசுரிக்கப்படும் – ஆசிரியர்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30 பகுதி 31 பகுதி 32 பகுதி 33 பகுதி 34 பகுதி 35 பகுதி 36 பகுதி 37 பகுதி 38 பகுதி 39 பகுதி 40 பகுதி 41 பகுதி 42 பகுதி 43 பகுதி 44 பகுதி 45 பகுதி 46 பகுதி 47 பகுதி 48 பகுதி 49 பகுதி 50 பகுதி 51 பகுதி 52 பகுதி 53 பகுதி 54 பகுதி 55 பகுதி 56 பகுதி 57

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

வெள்ளி 27 ஏப் 2018