மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 24 ஏப் 2018

தமிழ் சினிமாவின் தோள் மீதிருக்கும் வேதாளம் எது தெரியுமா?

தமிழ் சினிமாவின் தோள் மீதிருக்கும் வேதாளம் எது தெரியுமா?

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 55

இராமானுஜம்

திரைப்படத் துறையினர் வேலைநிறுத்தம் முடிவுக்குப் பின் வெளியான ‘மெர்க்குரி’ திரைப்படம் நகர்ப்புறங்களில் தாமதமாக எரியத் தொடங்கியிருக்கிறது.

தியேட்டருக்கு மக்கள் வருவார்களா என்ற அச்சத்துடன் மெர்க்குரி படம் திரையிட்ட தியேட்டர்களுக்கு மக்கள் வரத்தொடங்கியிருப்பது, தியேட்டரில் படம் பார்க்கும் ஆர்வம் மக்களிடத்தில் குறையவில்லை என்பதையும், தரமான படங்களையே மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதையும் விநியோகஸ்தர்களுக்கு உணர்த்தியிருக்கிறது.

திரைப்பட வெளியீட்டை ஒழுங்குபடுத்தும் முயற்சியில் தீவிரமாகியிருக்கும் தயாரிப்பாளர்கள் சங்கம், தரமான படங்களை திட்டமிட்டு, குறிப்பிட்ட காலத்துக்குள் தயாரிக்க வேண்டும் என்பதைத் தயாரிப்பாளர்கள் மத்தியில் வலியுறுத்தத் தொடங்கியுள்ளது.

சிறு பட்ஜெட் படங்கள், புதுமுகங்கள் நடிக்கும் படங்களுக்கு தியேட்டர் கிடைப்பது சிரமமாக உள்ளது எனத் தயாரிப்பாளர்கள் புலம்புவது தொடர் கதையாக இருந்தது. புதிய படங்கள் வெளியிடும் தேதியை ஒதுக்கீடு செய்யும் அதிகாரத்தைக் கையிலெடுத்திருக்கும் தயாரிப்பாளர்கள் சங்கம் தணிக்கை சான்றிதழ் தேதியை அடிப்படையாகக்கொண்டு ரிலீஸ் தேதியைத் தீர்மானிப்பதுடன் பெரிய படம், பட்ஜெட் படம் எனச் சரிவிகித கலவையில் படங்களைத் தீர்மானிக்க வேண்டும் என்கின்றனர் தியேட்டர் உரிமையாளர்கள்.

பிலிம் ரோல் கலாசாரம் முடிவுக்கு வந்தபின் டிஜிட்டல் தொழில்நுட்பம் படப்பிடிப்பை ஆக்கிரமிக்கத் தொடங்கியபோது படப்பிடிப்பு நடத்துவதற்கான நடைமுறைகள் எளிதானது. ஒரு கேமராவும், நடிப்பு ஆர்வம் உள்ளவர்களும் இருந்தால் படம் தயாரிக்கலாம் என்ற தன்னம்பிக்கை (சில சமயங்களில் ஆர்வக்கோளாறாகவும் முடியும் போக்கு) அதிகமானது. சில லட்சங்களை ஏற்பாடு செய்ய முடிந்தவர்கள் அல்லது சொந்த பணம் இருக்கக்கூடியவர்கள் கதாநாயகன் அல்லது இயக்குநராக அவதாரமெடுத்தார்கள். சினிமா தயாரிப்பு என்றால் முதலில் சங்கத்தில் உறுப்பினராக வேண்டும். எடுக்கப்படுகிற படத்துக்குத் தலைப்பு பதிவு செய்யப்பட வேண்டும் என்கிற அடிப்படை உண்மைகள் தெரியாமல் நூற்றுக்கணக்கான படங்கள் எடுக்கப்பட்டன. இதில் திரைப்படத் துறையின் சங்கங்களில் உறுப்பினர்களாக இருப்பவர்களும் பணி புரிந்திருக்கிறார்கள்.

ஆர்வக்கோளாறில் படம் எடுக்க வந்தவர்களிடம் முடிந்தவரை பணத்தைக் கறக்கிற வேலையைச் செய்த இவர்கள், இம்முயற்சிகளை ஒழுங்குபடுத்த முயற்சிக்கவில்லை. படம் முடிந்தபின் அதைத் திரையரங்குகளில் வெளியிட முயற்சிக்கையில் அவர்களுக்கு வடிகாலாக அமைந்தது குறைவான கட்டணத்தில் உறுப்பினராக முடிந்த கில்டு எனும் அமைப்பு. தயாரிப்பாளர்கள் சங்கம் போன்ற இந்தச் சங்கத்தில் மொழி மாற்றுப் படங்களை ரிலீஸ் செய்பவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் தயாரிக்கும் படங்கள் ரிலீஸுக்குத் தயாராகும்போது, தலைப்பு என்னுடையது என நீதிமன்றம் சென்ற அநேகம் பேர் கில்டு உறுப்பினர்களே. பணம் சம்பாதிப்பதற்காகவே கில்டு அமைப்பில் தலைப்பைப் பதிவு செய்து வைத்துவிட்டு அத்தலைப்பு தேவைப்படுவோர் கேட்கும்போது பேரம் பேசுவது கடந்த பல ஆண்டுகளாக நடந்துவருகிறது. இதற்குத் தயாரிப்பாளர்கள் சங்கம், கில்டு ஆகிய அமைப்புகளின் சில நிர்வாகிகளே உடந்தையாக இருந்த கதைகள் ஏராளம். இது போன்று இனியும் நடக்காமல் இருக்க தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் புதிய வழிமுறையை அமல்படுத்தத் தொடங்கியுள்ளது. அறிமுக நிலையிலேயே இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் சமபலத்தில் இருக்கிறது. விக்கிரமாதித்தன் போல் தனது முடிவை அமல்படுத்துவதில் தயாரிப்பாளர்கள் சங்கம் உறுதியாக இருக்கிறது.

அது என்ன? நாளை காலை 7 மணிக்கு.

குறிப்பு: இராமானுஜம் எழுதும் தொடர் குறித்த நாகரிகமான விமர்சனங்களும், மாற்றுப் பார்வைகளும் வரவேற்கப்படுகின்றன. அவை இத்தொடரின் இடையிடையே பிரசுரிக்கப்படும் – ஆசிரியர்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30 பகுதி 31 பகுதி 32 பகுதி 33 பகுதி 34 பகுதி 35 பகுதி 36 பகுதி 37 பகுதி 38 பகுதி 39 பகுதி 40 பகுதி 41 பகுதி 42 பகுதி 43 பகுதி 44 பகுதி 45 பகுதி 46 பகுதி 47 பகுதி 48 பகுதி 49 பகுதி 50 பகுதி 51 பகுதி 52 பகுதி 53 பகுதி 54

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

செவ்வாய் 24 ஏப் 2018