மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 14 ஏப் 2018

பேத்தியின் 'கண்ணே கலைமானே': ரசித்த கருணாநிதி

பேத்தியின் 'கண்ணே கலைமானே': ரசித்த கருணாநிதி

வீட்டில் ஓய்வெடுத்து வரும் திமுக தலைவர் மு.கருணாநிதி, தமிழரசுவின் மகள் பூங்குழலி பாடும் 'கண்ணே கலைமானே' பாடலை ரசித்துக் கேட்கும் காணொளி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக வீட்டிலிருந்தபடி ஓய்வெடுத்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து முரசொலி பவள விழா கண்காட்சி, அண்ணா அறிவாலயம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வந்தார். பிரதமர் உள்ளிட்டத் தலைவர்கள் அவரைச் சந்தித்து நலம் விசாரித்த நிலையில், இருமுறை தனது வீட்டின் முன்பு தொண்டர்களையும் சந்தித்துள்ளார்.

தினமும் பரபரப்பாக இருந்துவந்த திமுக தலைவர் கருணாநிதி, தற்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதை திமுக தொண்டர்களும், பொதுமக்களும் அறிந்துகொள்ள அவர் கொள்ளுப்பேரனுடன் கிரிக்கெட் விளையாடுவது, குழந்தைகளுடன் தான் யார் என்று கேட்பது, ஸ்டாலினுடனான சந்திப்பு உள்ளிட்ட வீடியோக்கள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மு.க.தமிழரசுவின் மகள் பூங்குழலி கருணாநிதியை சந்திக்கும் காணொளி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் "அவர் தாத்தாவின் அருகில் சென்று கண்ணே கலைமானே என்ற பாடலை பாடி மகிழ்விக்கிறார். பாடி முடித்த பிறகு தாத்தா பாட்டு நல்லாருக்கா என்று கேட்க, புன்னகை மூலம் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார் கருணாநிதி. தென்பாண்டித் தமிழே என்ற பாடலையும் பாடுகிறார் பூங்குழலி. மேலும் கொள்ளுப்பேத்திகளுடன் கொஞ்சும் காணொளியும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ...

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி!

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

3 நிமிட வாசிப்பு

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

5 நிமிட வாசிப்பு

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

சனி 14 ஏப் 2018