மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 2 ஏப் 2018

‘ஐ’ படத்துக்கு ரூ.2 கோடி நஷ்டம் ஏற்படுத்திய சீனிவாசன்

‘ஐ’ படத்துக்கு ரூ.2 கோடி நஷ்டம் ஏற்படுத்திய சீனிவாசன்

குறுந்தொடர்: திரையுலகில் டிஜிட்டல் நிறுவனங்களின் ஆதிக்கம் 33

இராமானுஜம்

வடதமிழக மாவட்டங்களில் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாகும் படங்களின் வசூல் தீபாவளியை விட அதிகமாக இருக்கும். ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் 2015 பொங்கல் அன்று வெளியான படம் ‘ஐ’. விக்ரம், எமி ஜாக்சன் நடித்த இந்தப் படத்தை ஷங்கர் இயக்கினார். ஐ படத்தைத் திரையரங்குகளில் திரையிட தமிழ்நாடு முழுவதும் கடும் போட்டி நிலவி வந்த குழலில், வடஆற்காடு ஏரியாவில் இந்தப் படத்துக்கு தியேட்டர் கிடைக்கவில்லை. காரணம் சீனிவாசன் என்பது தமிழ்த் திரையுலகில் அனைவருக்கும் தெரியும்.

விநியோகஸ்தராக, திரையரங்க உரிமையாளராக இரு வேடங்களில் பயணித்த சீனிவாசன் ‘ஐ’ படத்தை அவர் நடத்துகின்ற சொந்த மற்றும் கன்பர்மேஷனாகப் பணியாற்றிய தியேட்டர்களில் திரையிட்டால் 60% தான் பங்குத் தொகை கொடுக்க முடியும் எனக் கூறினார். ஆனால், சீனிவாசன் விநியோக உரிமை வாங்கிய படங்கள் தியேட்டர்களில் திரையிட 70% பங்குத் தொகை கொடுக்க ஒப்புக்கொண்டால் மட்டுமே ஒப்பந்தம் போடுவார்.

ஐ படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் விநியோகஸ்தர் என்பதால் சீனிவாசன் படத்தை 70% டேர்ம்ஸ்ஸில் திரையிட மறுத்ததுடன், தான் கன்பர்மேஷனாக இருக்கும் தியேட்டர் உரிமையாளர்களை ஐ படத்தைத் திரையிட விடாமல் தடுக்கும் முயற்சியிலும் வெற்றி பெற்றார்.

திரையரங்கு உரிமையாளர்களின் உரிமைக்காக உரக்கக் குரல் கொடுப்பதாகக் கூறப்படும் சீனிவாசன், வேலூரில் 25க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ஐ படத்தைத் திரையிட விடாமல் சுமார் 2 கோடி ரூபாய் வர்த்தகத்தைத் தடுத்தார். இந்தப் படத்தைத் திரையிட்டிருந்தால் சுமார் ஒரு கோடி வருமானம் தியேட்டர்களுக்குக் கிடைத்திருக்கும்.

நீண்ட போராட்டத்துக்குப் பின் ஆஸ்கர் ரவி குடியாத்தம், காட்பாடி, ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் ஆகிய ஊர்களில் மட்டும் ஐ படத்தை ரிலீஸ் செய்தார் சினிமாவில் தனக்குத் தொழில் நெளிவு சுளிவுகளை கற்றுக்கொடுத்து, தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுத்த ஆஸ்கர் ரவிக்கு அபாய மணி அடித்தவர் சீனிவாசன்.

இந்த நிகழ்வுக்குப்பின் வடஆற்காடு பகுதியில் ஆஸ்கர் ரவி, சீனிவாசனுக்கு எதிராகத் திரையரங்குகளைக் குத்தகைக்கு எடுக்க முயற்சி செய்தார். ஆனால், ஆஸ்கர் ரவி பிரபல விநியோகஸ்தராக இருந்தபோது தியேட்டர்களை நடத்திய நிகழ்வுகளை அவர்களால் மறக்க முடியவில்லை. அட்வான்ஸ் என்பது இவரிடம் ஒரு வழிப் பாதையாக இருந்ததால் தியேட்டர்கள் ஆஸ்கர் ரவிக்குக் கிடைக்கவில்லை.

தொழிலில் முன்னால் இருந்தவர்கள் செய்யும் தவறுகளினால், தவறான நபர்கள்கூட பிறருக்கு நல்லவர்களாகத் தெரிவார்கள். அதனை ஆஸ்கர் ரவிச்சந்திரன் நடவடிக்கை உறுதிப்படுத்தியது. தன்னுடைய தொழிலுக்கு எதிராக நேரடியாகவோ, மறைமுகமாகவோ யார் போட்டியாக வந்தாலும் அவர்களை நிர்மூலமாக்குவது சீனிவாசன் பாணி.

இவருடன் நேரடியாக மோதிய தியேட்டரை பொய் குற்றச்சாட்டு கூறி மூடி வைக்க கியூப் நிறுவனத்தை எப்படி பயன்படுத்தினார்? இதற்கு ஆதரவு நிலை எடுத்த திமிர் பிடித்த நடிகர் யார்?

நாளை காலை 7 மணி அப்டேட்டில்

குறிப்பு: இராமானுஜம் எழுதும் தொடர் குறித்த நாகரிகமான விமர்சனங்களும் மாற்றுப் பார்வைகளும் வரவேற்கப்படுகின்றன. அவை இத்தொடரின் இடையிடையே பிரசுரிக்கப்படும் – ஆசிரியர்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6 பகுதி 7 பகுதி 8 பகுதி 9 பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30 பகுதி 31 பகுதி 32

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

திங்கள் 2 ஏப் 2018