மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 30 மா 2018

கல்வி உரிமைச் சட்டம்: பள்ளிகளுக்குச் சுற்றறிக்கை!

கல்வி உரிமைச் சட்டம்: பள்ளிகளுக்குச் சுற்றறிக்கை!

2018-19ஆம் கல்வி ஆண்டில் அனைத்து மாவட்டங்களிலும் தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கை நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் இயக்குநர் கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இந்தச் சுற்றறிக்கை அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள், தலைமைக் கல்வி அதிகாரிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் ஆய்வாளர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்த கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (ஆர்டிஇ) 2009இன்படி, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு சுயநிதிப் பள்ளிகளில் 25 சதவீத இடம் ஒதுக்கப்பட வேண்டும். அந்த மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை, மாநில அரசே பள்ளிகளுக்குச் செலுத்தும். ஆனால் பெயரளவில் மட்டுமே இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் ஆர்டிஇ சட்டம் குறித்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கையில், “2018-19ஆம் கல்வி ஆண்டில் இலவச கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கான காலியிடங்கள் குறித்து அனைத்துப் பள்ளிகளிலும் அறிவிப்புப் பலகையில் விவரங்கள் ஓட்டப்பட வேண்டும். முதன்மைக் கல்வி அதிகாரி, மாவட்டக் கல்வி அதிகாரி, ஐஎம்எஸ் உதவித் தொடக்கக் கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் அறிவிப்பு வெளியிட வேண்டும்.

எல்கேஜி மற்றும் முதல் வகுப்பு மாணவர்கள் அவர்கள் குடியிருப்பில் இருந்து ஒரு கி.மீ சுற்றளவிற்குள் அமைந்த பள்ளிகளிலே விண்ணப்பிக்க முடியும். ஆனால் பள்ளிகளில் போதுமான மாணவர்கள் சேரவில்லையெனில், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களையும் இந்தத் திட்டத்தின் கீழ் சேர்த்துக்கொள்ளலாம்.

பெற்றோர்கள் இச்சட்டத்தின் கீழ் குழந்தைகளைச் சேர்க்க www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக, ஏப்ரல் 20 முதல் மே 18 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் அனைத்து மாவட்டங்களிலும் சிஇஒ, டிஇஇஒ, ஐஎம்எஸ், டிஇஒ, எஇஇஒ அலுவலகங்களிலும் விண்ணப்பிக்கலாம்.

பெற்றோர்கள் விண்ணப்பங்களைப் பள்ளிகளில் சமர்ப்பித்தால், பள்ளிகள் அவர்களுக்கு ஒப்புகை ரசீது கொடுக்க வேண்டும் மற்றும் விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும்.

சிஇஓ, டிஇஓ, டிஇஇஓ உள்ளிட்ட கல்வித் துறை சார்ந்த அலுவலகங்களில் கணினிகள் மற்றும் ஸ்கேனர்களைப் போன்ற அனைத்து வசதிகளும் எளிதில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களின் பட்டியல் மற்றும் நிராகரிக்கப்படும் விண்ணப்பங்கள் குறித்த விவரங்களை மே 22ஆம் தேதி 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட பள்ளிகள் அறிவிப்பு வெளியிட வேண்டும்.

குறிப்பிட்ட அளவைவிட அதிகமான மாணவர்கள் ஆர்டிஇ சேர்க்கைக்கு விண்ணப்பித்திருந்தால், பள்ளிக் கல்வித் துறையின் அதிகாரிகள் முன்னிலையில் குலுக்கல் முறையில் மாணவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஆதரவற்ற குழந்தைகள், எச்ஐவியால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் பிள்ளைகள், மாற்றுத் திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மாணவர்களும் மே 29, அன்று பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

3 நிமிட வாசிப்பு

நாட்டு மருந்துக் கடைகளில் மக்கள் கூட்டம்!

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

4 நிமிட வாசிப்பு

ஆஸ்திரேலிய சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - கொரோனாவை விரட்டும் இஞ்சி!

வெள்ளி 30 மா 2018