மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 15 மா 2018

ஸ்பெஷல்: புதுமையான இன்டீரியர் ஒர்க்ஸ்!

ஸ்பெஷல்: புதுமையான  இன்டீரியர் ஒர்க்ஸ்!

வீட்டைக் கட்டும்போது யாரும் இப்போது சாதாரணமாக நினைத்துவிடுவதில்லை. கட்டும் வீடு சின்னதாக இருந்தாலும், அவர்களின் மகிழ்ச்சிக்கோ அளவில்லாமல் இருக்கிறது. வீட்டின் கதவு, டைல்ஸ், ஜன்னல், பாத்ரூம், போர்டிகோ என ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்து அமைக்கிறார்கள். அப்படிக் கட்டும்போது, அவரவரின் விருப்பங்களுக்கு ஏற்ற மாதிரி கட்டாமல், புதிய ட்ரெண்டுகளையும், அப்டேட்களையும் கவனித்து, அதன்படி கட்டினால் வீட்டின் அழகைக் கூடுதலாகப் பெற முடியும்.

பிரவுன் லேயரிங்

​பொதுவாக இந்திய வீடுகளில் சுவர்கள், கதவுகள், ஜன்னல்கள் எனப் பழுப்பு நிறங்களில் ஆக்கிரமிப்பு கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். ஆனால் இப்போது கதவுகள், ஜன்னல்கள் பல வண்ணங்களில் கிடைப்பதால், அதைத்தான் மக்கள் அதிகமாக விரும்புகிறார்கள். ஆனால் தற்போது பழுப்பு நிற பர்னிச்சர்கள் ட்ரெண்டாக மாறியிருக்கின்றன. பழுப்பு நிற ஃப்ளோரிங் விஷயங்களும், பழுப்பு நிற டைல்களும் மீண்டும் வீடுகளுக்கு ஸ்மார்ட் லுக்கைக் கொடுக்கின்றன.

கிச்சன் ஐலேண்டு

வழக்கமாக கிச்சன் என்றாலே, ஸ்டோர் ரூம், டைனிங், சமைக்கும் அறை எனப் பிரித்து வைப்போம். ஆனால் அந்த மாடல் கிச்சன்களை இப்போது யாரும் விரும்புவதில்லை. மாடுலர் கிச்சன்களும்கூட, மக்களுக்கு அவ்வளவு பெரிய திருப்தியைக் கொடுத்துவிடவில்லை. ஆனால் ‘கிச்சன் ஐலேண்டு’ மாடல், ஸ்மார்ட் கிச்சன்களுக்கு கனக்கச்சிதமாகப் பொருந்துகின்றன. இதனை டைனிங் டேபிளாகக் கூட பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதால், கூடுதல் செளகர்யமாகவும் இருக்கிறது. மாடுலர் கிச்சன்களுடன், கிச்சன் ஐலேண்டுகளை அமைத்துக்கொள்ள முடியும். கிச்சன் ஐலேண்டுகளை அமைப்பதால், கிச்சனுக்கென்று தனியாக ரூம் செட்டப் தேவையில்லை. வரவேற்பு அறையின் கார்னர்களில்கூட ,கிச்சன் ஐலேண்டுகளுடன் கூடிய மாடுலர் கிச்சன்களை அமைத்துக் கொள்ளலாம்.

சிமென்ட் டைல்ஸ்

வெளிநாடுகளில் வீட்டுச் சுவர்களுக்கு பெயின்ட் அடிக்காமல் விடுவதுதான் பேஷனாக இருக்கிறது. பெயின்ட்டுக்கு பதிலாக சிமென்ட் கலவையைக் கொண்டு எக்ஸ்ட்ரா லேயர் அடிப்பார்கள். அது பார்க்க புதுமையாகவும், சமகாலத்து லுக்கையும் கொடுக்கும். அந்த ட்ரெண்ட் இனி இந்தியாவில் களமிறங்க வாய்ப்பு அதிகம். அதுமட்டுமல்லாமல், ப்ளோரிங் டைல்ஸ்களிலும் சிமென்ட் டைல்ஸ்கள் அறிமுகமாகியிருக்கின்றன. இந்த டைல்ஸ்களை வீட்டின் தரையில், மாடி படிக்கட்டுகளில் பொருத்தும்போது சின்ன இடம்கூட அகலமாகத் தெரியும்.

பிரைட் வண்ணங்கள்

எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வல்லமை வண்ணங்களுக்கு இருப்பதால், வீட்டுக்கு அடிக்கும் வண்ணங்களைத் தேர்வு செய்வதிலும், மாடர்னிட்டி கலந்திருக்க வேண்டும். சமகாலத்தில் அடர் நிறங்களை அடிப்பது வழக்கத்தில் இருந்தாலும். அதன் ஷேடுகளிலேயே அடுத்தடுத்த சுவர்களுக்கு வண்ணங்களை அடிக்கும் பழக்கம், நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இல்லை. ஆனால் அக்வா புளூ, மஞ்சள், பெய்ஜ் மற்றும் கிரே நிறங்கள் மாடர்னிட்டியைத் தருகின்றன. முக்கியமாக மஞ்சள் நிறமும், அந்த நிறத்தின் ஷேடுகளும் அதிகமாகப் பரிசீலிக்கப்படுகின்றன.

ரெடிமேட் அலமாரிகள்

​கட்டிடம் கட்டும்போதே அலமாரிகளையும் சேர்த்துக் கட்டுவது அந்தக் காலம். ஆனால் இப்போது மாடர்ன் அலமாரிகள் ரெடிமேடுகளாகக் கிடைக்கின்றன. அதையும் தாண்டி, கஸ்டமைஸ் அலமாரிகள் அதிகமாக பரிசீலிக்கப்படும். விதம் விதமான லுக் தரும் அலமாரிகளுக்கு, வீட்டை அழகாக்குவதில் அதிக முக்கியத்துவம் இருக்கிறது.

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ...

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணி!

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

3 நிமிட வாசிப்பு

சிறந்த கொரோனா விழிப்புணர்வு மீம்ஸ்க்கு ரூ.1000!

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

5 நிமிட வாசிப்பு

டைம் 100: பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்ற காரணம்?

வியாழன் 15 மா 2018