மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 6 மா 2018

மொகலாயர்களின் கலைத்திறனைச் சொல்லும் சிக்கன்காரி!

மொகலாயர்களின் கலைத்திறனைச் சொல்லும்  சிக்கன்காரி!

உத்தரப்பிரதேச மாநிலத்துக்கே தனி அடையாளத்தைக் கொடுத்துள்ளன சிக்கன்காரி புடவைகள். மொகலாயர்களின் கலைத்திறனைத் தாங்கி நிற்கும் பெருமைமிகு ஆடைகளில் சிக்கன்காரி புடவைகளுக்குத்தான் முதலிடத்தை அளிக்க வேண்டும்.

மொகலாயர்களின் ஆட்சிக்காலத்தில், தற்போதைய உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகராக இருக்கும் லக்னோ மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இந்த ஆடை பிரபலமாக இருந்து வருகிறது. முழுக்க முழுக்க வெள்ளை நூல்களால் எம்ப்ராய்டரி செய்வது. சிக்கன்காரி என்ற பாரசீக சொல்லுக்கான அர்த்தமும் எம்ப்ராய்டரிதான். இன்னும் கூட நுணுக்கம் மாறாமல் அளிக்க, இந்த யந்திர உலகத்திலும் முழுக்க கைகளாலேயே எம்ப்ராய்டரி போடப்படுவதுதான் சிக்கன்காரி புடவையின் சிறப்பு.

லக்னோ என்றாலே சிக்கன்காரி என்கிற அளவுக்கு இந்தப் புடவைகள் உத்தரப்பிரதேச மக்களால் கொண்டாடப்படுகின்றன. இதில் அளிக்கப்படும் டிசைன்களும், தாஜ்மகால் தொடங்கி மொகலாயர்களின் பாரசீகக் கலை வடிவங்களை அச்சுப்பிசகாமல் பிரதிபலிக்கின்றன. இன்றும் இதன் பிரத்யேக டிசைன்கள், மொகலாயர்களின் கலைகளையே அடிப்படையாகக் கொண்டுள்ளன. இதில் டெப்சி, பகியா, ஹூல், ஸான்ஸீரா, ராஹெட், பனார்ஸி என பதினைந்துக்கும் மேற்பட்ட ஸ்டிச்சிங் வகைகள் உள்ளன.

தொடக்கக்காலத்தில் இந்த எம்ப்ராய்டரிகள், தூய பருத்தியால் நூற்கப்பட்ட வெள்ளை நூல்களால் மட்டுமே டிசைன் செய்யப்பட்டன. தற்போது புதிய ஃபேப்ரிக்குகளையும் யுக்திகளையும் பயன்படுத்துகின்றனர். மேலும், மிரர் வொர்க், கம்தானி, சீக்வன், பட்லா பீட்ஸ் வொர்க்குகள் என சமகால வடிவமைப்பாளர்கள் சிக்கன்காரிக்கு மென்மேலும் அழகூட்டுகின்றனர்.

இந்தியாவின் பாரம்பரியக் கலை வடிவமாக இருக்கும் சிக்கன்காரி, உலக அளவிலும் மிகவும் பிரபலமடைந்துள்ளது. ராம்ப் ஷோக்களில் இந்திய டிசைனர்கள் சிக்கன்காரி ஆடைகளை டிஸ்ப்ளே செய்வதில், அதிக ஆர்வம் காட்டுகின்றனர். விசேஷங்களுக்கு விரும்பும் கிராண்ட் தோற்றத்தையும், அன்றாடப் பயன்பாட்டுக்கு ஏற்ற சிம்பிள் தோற்றத்தையும் சிக்கன்காரியில் கொடுக்க முடியும் என்பதால், அதை விரும்புவோரின் எண்ணிக்கை இன்னும் குறையவில்லை.

சிறையில் ’ஏ கிளாஸ்’ அறை கேட்ட சிவசங்கர் பாபா

2 நிமிட வாசிப்பு

சிறையில் ’ஏ கிளாஸ்’ அறை கேட்ட சிவசங்கர் பாபா

வேலைவாய்ப்பு: அரசு நீர்வளத்துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: அரசு நீர்வளத்துறையில் பணி!

ரூபாய் நோட்டுகளைக் கூடுதலாக அச்சிடும் திட்டம் இல்லை: நிர்மலா ...

4 நிமிட வாசிப்பு

ரூபாய் நோட்டுகளைக் கூடுதலாக அச்சிடும் திட்டம் இல்லை: நிர்மலா சீதாராமன்

செவ்வாய் 6 மா 2018