மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 பிப் 2018

கர்நாடகா: இன்று முதல் ராகுல் பிரசாரம்!

கர்நாடகா: இன்று முதல் ராகுல் பிரசாரம்!

கர்நாடகா மாநிலச் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், இன்று (பிப்ரவரி 10) முதல் தனது பிரசாரத்தைத் தொடங்குகிறார் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி. பெல்லாரி மாவட்டத்திலுள்ள விஜயநகரா தொகுதியில், அவர் தனது முதல் பிரசாரத்தை மேற்கொள்கிறார்.

கர்நாடகா மாநிலத்தில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது. அதனால், இன்னும் சில நாள்களில் அங்கு சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி, காங்கிரஸும் பாஜகவும் போட்டி போட்டுக்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றன.

முதலமைச்சர் சித்தராமையாவும், பாஜகவின் கர்நாடகா மாநிலத் தலைவர் எடியூரப்பாவும் தீவிரமாகப் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். கடந்த ஞாயிறு (பிப்ரவரி 4) அன்று பெங்களூருவில் நடந்த பாஜக விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன், அவர் மீண்டும் அங்கு பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், கர்நாடகாவின் வடமாவட்டங்களில் இன்று முதல் பிப்ரவரி 13ஆம் தேதிவரை பிரசாரத்தில் ஈடுபடவிருக்கிறார் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி. பெல்லாரி மாவட்டத்திலுள்ள விஜயநகரா தொகுதியில், இன்று அவர் தனது பிரசாரத்தைத் தொடங்குகிறார். இதைத் தொடர்ந்து, ராய்ச்சூர் மற்றும் குல்பர்கா மாவட்டங்களில் அவர் பயணம் மேற்கொள்கிறார். அப்போது, அங்குள்ள ஹூலிகெம்மா கோயில், கவிசித்தேஸ்வரா மடம், காஜா பந்தேநவாஸ் தர்கா உள்ளிட்ட ஆன்மிகத்தலங்களுக்குச் செல்கிறார் ராகுல்.

குஜராத் தேர்தல் பிரசாரத்தின்போது, அங்குள்ள கோயில்களுக்குச் சென்றுவந்தார் ராகுல். இதை முன்வைத்து, அவரை விமர்சனம் செய்தனர் பாஜகவினர். இந்த நிலையில், கர்நாடகாவிலும் அதேமுறையை ராகுல் பின்பற்றுவார் என்று காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கர்நாடகாவின் வடமாவட்டங்களில் பாஜகவுக்கு ஆதரவு இருந்துவரும் நிலையில், அங்குள்ள லிங்காயத்து சமூக மக்களின் வாக்குகளைக் குறிவைத்து ராகுல் இந்தப் பிரசாரத்தில் ஈடுபடுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில வாரங்களாக, சித்தராமையாவும் இப்பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

சனி 10 பிப் 2018