மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 பிப் 2018

ஹாலிவுட்டிலும் கலக்கும் தனுஷ்

ஹாலிவுட்டிலும் கலக்கும்  தனுஷ்

கோலிவுட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான தனுஷ் கோலிவுட், பாலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் நடித்துக் கலக்கிவருகிறார்.

கௌதம் மேனனின் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’, பாலாஜி மோகனின் ‘மாரி 2’, வெற்றிமாறனின் ‘வடசென்னை’ எனப் பல படங்கள் நடித்துவரும் தனுஷ், முதல் முறையாக ஹாலிவுட் படம் ஒன்றில் நடித்துள்ளார். இதன் டீசர் வெளியாகியுள்ளது.

இப்படத்தைக் கனடா இயக்குநர் கென் ஸ்காட் இயக்கியுள்ளார். ஃபிரெஞ்ச் எழுத்தாளர் ‘ரொமெயின் பியூட்ரோலஸ்’ எழுதிய நாவலின் தழுவலாக இப்படம் அமைந்துள்ளதால் இப்படத்திற்கு ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் த ஃபகிர்’ எனும் நாவலின் பெயரையே வைத்திருக்கின்றனர். இதில் தனுஷ் ‘அஜதஷத்ரு லாவாஷ் படேல்’ எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மும்பையில் வாழும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த, மந்திர தந்திரங்கள் மூலம் பேய்களை ஓட்டும் இளைஞன், வேலை விஷயமாக ஃபிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் செல்கிறான். அங்கு வசிக்கும் மேரி எனும் பெண்ணோடு நண்பனாகிறான். பிறகு அவள் மீது காதல் கொள்கிறான். ஏதோ ஒரு காரணமாக விற்பனைக்காக ஐரோப்பாவிற்கு இறக்குமதியாகவிருக்கும் ஓர் அலமாரிக்குள் மாட்டிக்கொள்கிறான். அந்த அலமாரி விற்பனைக்காக ஐரோப்பாவைச் சுற்றி வலம்வருகிறது. இதனைத் தொடர்ந்து நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களைக் கொண்டதாக இப்படம் இருக்குமென வெளியாகியிருக்கும் டீசரின் மூலம் கருத முடிகிறது.

சோனி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படம் ஆங்கிலம், ஃபிரெஞ்ச் என இருமொழிகளில் மே 30ஆம் தேதி வெளியாகவுள்ளது

தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் த ஃபகிர் ட்ரெய்லர்

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

சனி 10 பிப் 2018