மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 பிப் 2018

ஜீயருக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு!

ஜீயருக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு!

இரு பிரிவினரிடையே கலவரத்தைத் தூண்டும் விதமாகப் பேசியதாக திருவில்லிப்புத்தூர் ஜீயர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் கவிஞர் வைரமுத்து பேசியதாக கூறப்பட்ட நிலையில், வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி திருச்செங்கோட்டில் ஒரு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய சடகோப ராமானுஜ ஜீயர், இத்தனை நாள் சாமியார்களெல்லாம் சும்மா இருந்தோம். எங்களுக்கும் கல் எறியவும் தெரியும், சோடா பாட்டில் வீசவும் தெரியும். ஆனால், அதைச் செய்ய மாட்டோம் என்று பேசியிருந்தார்.

இந்தப் பேச்சுக்கு எதிராகத் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த அமைப்பின் நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் வைரவேல் தாக்கல் செய்துள்ள மனுவில், "ஜீயரின் சோடா பாட்டில் வீசுவேன் என்ற பேச்சைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். தமிழகத்தில் இரு பிரிவினரிடையே கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக ஜீயர் பேசியுள்ளார்.

இதுகுறித்து " கலவரத்தில் ஈடுபடும்படி மத அமைப்புகளை ஜீயர் தூண்டி விடுகிறார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று திருச்செங்கோடு காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தேன். ஆனால் இதுவரை ஜீயர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்தும் எவ்வித பயனுமில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

சனி 10 பிப் 2018