மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 பிப் 2018

முதல் படமே சவாலாக இருந்தது: அதுல்யா

முதல் படமே சவாலாக இருந்தது: அதுல்யா

எனக்கு மிகவும் சவலான கதாபாத்திரமாக இந்தப் படம் இருந்தது என நாகேஷ் திரையரங்கம் படத்தில் நடித்தது குறித்து தெரிவித்துள்ளார் நடிகை அதுல்யா.

ஆரி, அஷ்னா சவேரி, அதுல்யா ரவி, மும்பை மாடல் மாசூம் சங்கர் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்துள்ள படம் ‘நாகேஷ் திரையரங்கம்’. இசாக் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இதில் முக்கிய கேரக்டர்களில் எம்.ஜி.ஆருடன் பல படங்களில் நடித்த லதா மற்றும் சித்தாரா, ‘கயல்’ ஃபெரெரா, ‘கயல்’ தேவராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இதன் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில் இன்று (பிப்ரவரி 10) நடைபெற்றது. இதில் ஆரி, இசாக், அதுல்யா, அஷ்னா சவேரி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

படம் குறித்து இயக்குநர் இசாக் பேசும்போது, “தமிழ் சினிமாவில் இதுவரையில் எண்ணற்ற பேய்ப் படங்கள் வந்திருந்தாலும் இந்தப் படத்தின் கதை அந்தப் படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதையாக இருக்கும். ‘திரையரங்கில் பேய்’ என்ற கோணத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் பேய்ப் படப் பிரியர்களை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும்’’ என்று உறுதிபடக் கூறினார்.

“ரஜினி, விஜயகுமார் ஆகியோருடன் இணைந்து ‘ஆயிரம் ஜென்மங்கள்’ என்ற பேய்ப் படத்தில் நடித்த பிறகு ஒரு நீண்ட இடைவேளைக்குப் பிறகு இப்படத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தின் கதையும், என் கேரக்டரும் எனக்கு ரொம்பவும் பிடித்ததால்தான் இந்தப் படத்தில் நடித்தேன்” என்று நடிகை லதா தனது அனுபவங்களைப் பகிர்ந்தார்.

காதல் கண்கட்டுதே படத்திற்கு முன்பாக இந்தப் படத்தில்தான் முதலில் ஒப்பந்தமானேன் என்று பேச ஆரம்பித்த அதுல்யா, “என்னுடைய முதல் படம் என்பதால் இதில் நடிப்பது எனக்கு மிகவும் சவாலானதாக இருந்தது. காண்டாக்ட் லென்ஸ் வைத்து நடித்தது புதுமையாக இருந்தது. இந்தப் படம் ரசிகர்களைக் கவரும். அனைவரும் தியேட்டரில் சென்று பாருங்கள்” என்றார்.

இந்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதுதான் தன் தாயை இழந்ததாகத் தெரிவித்த ஆரி, “என்னால் இந்தப் படத் தயாரிப்பாளரும் மற்றவர்களும் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத் தாய் இறந்த சோகத்திலும் நான் நடித்துக்கொடுக்க வேண்டிய காட்சிகளை நடித்து முடித்துவிட்டுத்தான் தயாரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள ஊருக்குக் கிளம்பினேன்” என்று கூறியதுடன் இது வழக்கமான பேய்ப் படமாக இருக்காது என்றார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

2 நிமிட வாசிப்பு

ஈரோடு: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 28ஆம் தேதி ஏலம்!

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

2 நிமிட வாசிப்பு

இலங்கை மக்கள் நிவாரணத்துக்காக டீக்கடையில் மொய் விருந்து!

சனி 10 பிப் 2018