மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 பிப் 2018

ரஃபேல் விவரங்களை ராகுல் கேட்பது ஏன்?

ரஃபேல் விவரங்களை ராகுல் கேட்பது ஏன்?

ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தின் விவரங்களைச் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் தெரிவிக்க விரும்புகிறாரா ராகுல் என்று கேள்வி எழுப்பியுள்ளார் பீகார் மாநில துணை முதல்வர் சுஷில் மோடி.

கடந்த மே மாதம் முதல், பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரையும் துணை முதல்வர் சுஷில் மோடியையும், ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி தொடர்ந்து விமர்சித்துவருகிறார். மூன்று நாட்களுக்கு முன்பு, கயா மாவட்டத்திலுள்ள 8 வயதுச் சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார். அந்த விவகாரம் பற்றி தொடர்ந்து ட்விட்டரில் பதிவிட்ட தேஜஸ்வி, அந்தச் சிறுமியின் அடையாளங்களைப் பகிரங்கப்படுத்தியதாகப் புகார் எழுந்தது.

கடந்த வாரம் பீகாரில் ’சம்விதான் பசாவ் நியாய் யாத்ரா’ (அரசியலைப்பைப் பாதுகாப்பதற்கான நீதிப் பயணம்) தொடங்கினார் தேஜஸ்வி. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த நிலையில், நேற்று (பிப்ரவரி 9) பாட்னாவில் செய்தியாளர்களைச் சந்தித்த பீகார் துணை முதல்வர் சுஷில் மோடி, தேஜஸ்வியின் பயணத்தை விமர்சித்துப் பேசினார். “பாலியல் அத்துமீறலுக்கு ஆளான சிறுமியின் அடையாளத்தை பொதுமக்கள் முன்பாக வெளியிட்டவர்கள், அரசியலமைப்பைப் பாதுகாக்கப்போவதாகச் சொல்வது கேலிக்கூத்து” என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கும் பீகார் எதிர்கட்சித் தலைவர் தேஜஸ்விக்கும் இடையே ஏராளமான ஒற்றுமைகள் இருப்பதாகவும் கூறினார். “இரண்டு பேருமே குடும்ப அரசியலால் பயன்பெறுபவர்கள். எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்படுவதில் தோல்வியடைந்தவர்கள். ஒருவர், இந்தியப் பிரதமரை அவமானப்படுத்தும் நோக்கில் செயல்படுகிறார். இன்னொருவர், தனது தந்தையின் வயதுடைய மாநில முதல்வரைத் தொடர்ந்து இழிவுபடுத்திவருகிறார்” என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய சுஷில் மோடி, “சுமார் 58 ஆயிரம் கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவரங்களை வெளியிட வேண்டுமென்று மத்திய அரசை வற்புறுத்திவருகிறார் ராகுல். பாதுகாப்புக் காரணங்களால், அதனை வெளியிட முடியாது. இந்த விவரங்களை ராகுல் கேட்பது ஏன்? இதனை அப்படியே சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் அளிப்பதற்காகவா?” என்று கேள்வி எழுப்பினார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

சனி 10 பிப் 2018