மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 பிப் 2018

விரிவுரையாளர் தேர்வு: சிபிஐ விசாரணை வேண்டும்!

விரிவுரையாளர் தேர்வு: சிபிஐ விசாரணை வேண்டும்!

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு குறித்து உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்தில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக பல்வேறு தலைவர்களும் குற்றம் சாட்டி வந்தனர். மதிப்பெண் முறைகேடு காரணமாக அந்த தேர்வு ரத்து செய்யபடுவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் இது தொடர்பாக இன்று (பிப்ரவரி10) திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"கடந்த செப்டம்பர் 16 ஆம் நாளன்று நடைபெற்ற அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, மதிப்பெண் முறைகேடு காரணமாக ரத்து செய்யப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து இருப்பது, அதிமுக ஆட்சியில் எந்தளவிற்கு பணியாளர் நியமனங்களில் ஊழல் மலிந்து இருக்கிறது என்பதை வெளிக்காட்டுகிறது" என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு மட்டுமல்லாது தமிழக அரசின் சார்பாக நடத்தப்படும் அனைத்து பணியாளர் தேர்வுகளிலும் இவ்வாறே ஊழல் மலிந்துள்ளதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், "156க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், பாரபட்சமற்ற விசாரணை மேற்கொள்ளும் வகையில், சிபிஐ வசம் இந்த வழக்கு விசாரணையை ஒப்படைக்காமல், சென்னை மாநகர போலீஸிடமே விட்டு வைத்தது ஏன்? "என்ற கேள்வியையும் ஸ்டாலின் எழுப்பியுள்ளார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

சனி 10 பிப் 2018