பாம்பன் பாலத்தில் சாகசம் செய்த இளைஞர்!


பாம்பன் பாலத்தில் இருந்து இளைஞர் ஒருவர் கடலுக்குள் குதிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிடுவதற்காக பாம்பன் பாலத்தில் இருந்து இளைஞர் ஒருவர் ஆபத்தான முறையில் கடலில் குதிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. ராமேஸ்வரம் கடல் பகுதியில் கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தைத் தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பார்த்துச் செல்கின்றனர். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் வெளியிடுவதற்காக இளைஞர் ஒருவர் பாம்பன் பாலத்தில் இருந்து குதிக்கும் காட்சிகளை வீடியோவாகப் பதிவு செய்துள்ளார்.