மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 பிப் 2018

யாசர் அராபத் கல்லறையில் மோடி மரியாதை!

யாசர் அராபத் கல்லறையில் மோடி மரியாதை!

பாலஸ்தீனம் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இன்று (பிப்ரவரி 10) ரமல்லா நகரிலுள்ள முன்னாள் பாலஸ்தீன அதிபர் யாசர் அராபத் கல்லறையில் மரியாதை செலுத்தினார். அதன்பின், பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸுடன் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டார்.

பிரதமர் நரேந்திர மோடி, அரசுமுறைப்பயணமாக பாலஸ்தீனம், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று இரவு ஜோர்டான் நாட்டுக்குச் சென்ற மோடி, அந்நாட்டு மன்னர் இரண்டாம் அப்துல்லாவைச் சந்தித்தார். இன்று, ஜோர்டானில் இருந்து விமானம் மூலமாக பாலஸ்தீனத்திலுள்ள ரமல்லா நகருக்குச் சென்றார். அந்நாட்டின் பிரதமர் ரமி ஹமதுல்லா அவரை வரவேற்றார்.

தனது பயணத்தின் முதல் நிகழ்ச்சியாக, மறைந்த முன்னாள் பாலஸ்தீன அதிபர் யாசர் அராபத்தின் கல்லறைக்குச் சென்று மரியாதை செலுத்தினார் மோடி. அதன்பின், அவர் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை சந்தித்துப் பேசினார். அப்போது, இந்தியா – பாலஸ்தீனம் இடையிலான உறவுகள் குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இரு நாடுகளுக்கும் இடையே சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சந்திப்பு குறித்து உரையாற்றிய மோடி, கடுமையான சூழலில் பாலஸ்தீன மக்கள் முன்னேற்றத்தைக் கண்டுள்ளது பாராட்டுக்குரியது என்று தெரிவித்தார். “இரு நாடுகளும் முன்னேற்றப்பாதையில் ஒன்றாக இணைந்து செயல்படுவது கண்டு மகிழ்ச்சியடைகிறேன். பாலஸ்தீனத்தில் சமாதானம் ஏற்படவே, நாங்கள் விரும்புகிறோம். பேச்சுவார்த்தை மூலமாக நிரந்தர தீர்வு சாத்தியம் எனவும் நம்புகிறோம்” என்று பேசினார். மேலும், வரும் ஆண்டிலிருந்து பாலஸ்தீனம் மற்றும் இந்தியா இடையிலான மாணவர் பரிமாற்ற எண்ணிக்கை ஐம்பதில் இருந்து 100ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்தியத் தலைமை பாலஸ்தீனத்தில் அமைதி நிலவ எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார் மஹ்மூத் அப்பாஸ்.

இந்திய பிரதமர் பாலஸ்தீனம் செல்வது இதுவே முதல்முறை என்பதால், மோடியின் பயணம் வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது. இந்தப் பயணத்தில் மோடியின் பாதுகாப்பை, ஜோர்டான் மற்றும் இஸ்ரேல் நாட்டின் பாதுகாவலர்கள் கவனித்துக்கொண்டனர்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

சனி 10 பிப் 2018