மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 பிப் 2018

2018 குளிர்கால ஒலிம்பிக்: முதல் தங்கம்!

2018 குளிர்கால ஒலிம்பிக்: முதல் தங்கம்!

தென் கொரியாவில் நேற்று (பிப்ரவரி 9) தொடங்கிய குளிர்கால ஒலிம்பிக் தொடரில் பனிச்சறுக்கு போட்டியில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சார்லோட் கல்லா முதல் தங்கத்தை கைப்பற்றினார்.

தென்கொரியாவில் 2018ஆம் ஆண்டிற்கான குளிர்கால ஒலிம்பிக் தொடர் நேற்று கோலாகலமாக தொடங்கியது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கவுள்ள இந்த தொடரில் இன்று நடைபெற்ற பனிச்சறுக்கு விளையாட்டின் இறுதிப் போட்டியில் ஸ்வீடன் நாட்டினைச் சேர்ந்த சார்லோட் கல்லா வெற்றி பெற்று முதல் தங்கத்தை கைப்பற்றினார்.

30 வயதான சார்லோட் நடப்பு சாம்பியனான நார்வே வீராங்கனை மரிட் பிஜோர்ஜனை 7.8 நொடிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதலிடம் பெற்றார். மரிட் வெள்ளிப்பதக்கம் கைப்பற்றியதன் மூலம் மொத்தமாக 11 பதக்கங்களைக் கைப்பற்றிய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். 44.9 நிமிடத்தில் முதலிடம் பெற்ற சார்லோட் இதுவரை 3 ஒலிம்பிக் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். பின்லான்ட் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டா ப்ரம்கோஸி மூன்றாம் இடம் பெற்றார்.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

சனி 10 பிப் 2018