மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 பிப் 2018

திருவள்ளூரில் மாவோயிஸ்டுகள் கைது !

திருவள்ளூரில்  மாவோயிஸ்டுகள் கைது !

திருவள்ளூர் அருகே பதுங்கியிருந்த இரு மாவோயிஸ்டுகளைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அருகே உள்ள புல்லரம்பாக்கத்தில் தசரதன், செண்பகவள்ளி ஆகிய இரண்டு மாவோயிஸ்டுகள் இன்று (பிப்ரவரி 10) கைது செய்யப்பட்டுள்ளனர்,

கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். விசாரணைக்குப் பிறகே அவர்கள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவரும். அப்பகுதியில் இது போன்று மேலும் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருக்கிறார்களா என்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் கடந்த 10 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாகத் தமிழக, கேரள எல்லையில் ஆனைகட்டி சுற்றுப்பகுதியில், மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. அப்பகுதிகளில் போலீசாருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே அடிக்கடி துப்பாக்கிச் சண்டை நடந்துவருகிறது. எனவே மாவோயிஸ்டுகளைக் கட்டுப்படுத்த எல்லைப் பகுதியில் புதிதாகக் காவல் நிலையம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

சனி 10 பிப் 2018