மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 பிப் 2018

இலவச புரமோஷன் பக்தர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

இலவச புரமோஷன் பக்தர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படத்தின் டீசரை வெளியிட்டுவிட்டார்கள். முழுக்க முழுக்க அடல்ட் படமாக உருவாகியிருப்பதால், ‘குழந்தைகள் பார்க்கத் தடைசெய்யப்பட்ட டீசர்’ என்ற அறிவிப்புடன் யூ ட்யூபில் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இணையதளத்துக்கு ஏது சென்சார்? அப்பா, அம்மா, மாமா, அத்தை, மொபைலைப் பயன்படுத்தும் அத்தனை 18 வயதுக்குட்பட்டவர்களும் இதைப் பார்க்க முடியும்.

வெக்கேஷனுக்காக ஒரு கெஸ்ட்-ஹவுஸுக்குச் செல்லும் நண்பர்கள் ஒரு காமப் பேயிடம் சிக்கிக்கொள்வதும், இயல்பாக மனிதர்களுக்கு இருக்கும் உணர்ச்சிகளை அந்தப் பேய் பயன்படுத்திக்கொள்வதையும் படமாக எடுத்திருக்கிறார்கள். சுய இன்பம் காண்பது மட்டுமே டிரெய்லரில் எங்கெங்கிலும் காணப்படுகிறது. வசனத்தையெல்லாம் படத்தில் வைத்திருக்கிறார்கள்போல. கண்டிப்பாக டபுள் மீனிங் வசனங்கள்தான் என்று ஏற்கனவே அறிவித்துவிட்டார்கள். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், தமிழ்த் திரையுலகில் மிகப் பெரிய சர்ச்சையை உண்டாக்கிய ‘ ப்ளூ சட்டை விமர்சகர்’ என்று அன்போடு அழைக்கப்படும் தமிழ் டாக்கீஸ் ராஜனை, இந்த டீசரை விளக்கவைத்து உருவாக்கியிருக்கிறார்கள்.

ஒரு நல்ல இயக்குநர் என்பவர் எப்போது ரசிகர்கள் கைதட்டுவார்கள் என்பதை சரியாகத் தெரிந்துவைத்திருப்பவர் என்பார்கள். அந்த வகையில், டீசரின் இறுதியில் “இந்தப் படத்தை சாதாரணமாக விட்டாலே மூன்று நாட்களில் காணாமல் போய்விடும். படத்துக்கு எதிராக போராடுகிறேன் எனக் கொடி தூக்கி பத்து நாட்கள் ஓடவைக்காதீர்கள்” என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் அதையும் மீறி இந்தத் திரைப்படத்துக்கு எதிராக ‘Handjob Cabin’ என்ற அமெரிக்க திரைப்படத்தைத் திருடி எடுத்துவிட்டார்கள் என்று கூறி சமூக வலைதளங்களில் புரமோஷன் செய்துவருகிறார்கள்.

சிலரது இந்தச் செயலுக்கு பதிலளித்திருக்கும் இருட்டு அறையில் முரட்டுக்குத்து பட இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் “பக்தர்களே, எங்கள் படம் Handjob Cabin-இன் ரீமேக் என்று எப்படிச் சொல்கிறீர்கள். அந்தப் படத்தின் டிரெய்லரை ரிலீஸ் செய்தார்களே தவிர படமாக எடுக்கப்படவே இல்லை. உருவாகாத ஒரு படத்தை எப்படித் திருட முடியும்? டீசரில் பார்த்த சில காட்சிகள், அதன் டிரெய்லருடன் ஒத்துப்போனாலும் இது முழுக்க முழுக்க வேறு கதை” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இவர் உருவாக்கிய ஹரஹரமஹாதேவகி படத்தை முன்வைத்து, அவரது தற்போதைய படத்துக்கு எதிராகப் பேசுபவர்களை ’பக்தர்களே’ எனக் குறிப்பிடவில்லை. இப்படி அவர் படத்துக்கு இலவச புரமோஷன் செய்யும் எந்தக் கட்சிக்காரர்களை அவர் குறிப்பிடுகிறார் என்பதை நாம் சொல்லித்தான் தெரிந்துகொள்ள வேண்டுமா? இரண்டு படங்களின் டிரெய்லர்களின் இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இருட்டு அறையில் முரட்டுக்குத்து- டீசர்

Handjob Cabin- டிரெய்லர்

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

5 நிமிட வாசிப்பு

கிரிவலப்பாதையில் போலி சாமியார்களை அகற்ற வேண்டும்!

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ...

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் எண்ணிக்கை: உலக சுகாதார ‌நிறுவனத்தின் எச்சரிக்கை!

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

சனி 10 பிப் 2018