மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 பிப் 2018

தொடரைக் கைப்பற்றுமா இந்தியா?

தொடரைக் கைப்பற்றுமா இந்தியா?

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி இன்று (பிப்ரவரி 10) ஜோகன்ஸ்பர்க்கில் நடைபெறுகிறது.

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்தாலும், ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடி 3-0 என முன்னிலை வகிக்கிறது. இன்று நடைபெறும் நான்காவது ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்றால் தொடரில் வெற்றி பெற்று இந்திய அணி முதன்முறையாக தென்னாப்பிரிக்காவில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய சாதனையை பெறும். அதேபோல் இன்று போட்டி நடைபெறவிருக்கும் ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் இந்திய அணி இதுவரை தோல்வியைச் சந்தித்தது கிடையாது. அதுமட்டுமின்றி முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, தொடரின் மீதமுள்ள போட்டிகளில் தோல்வியடைந்தாலும் தொடர் சமனில் முடியவே வாய்ப்புள்ளது. எனவே தொடரை இந்திய அணி இழக்க வாய்ப்பில்லை. அதனால் முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற உற்சாகத்துடன் விளையாடி நான்காவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் உத்வேகத்துடன் இந்திய அணி இன்று களமிறங்கவுள்ளது.

தென்னாப்பிரிக்க அணியைப் பொறுத்தவரை, முதல் மூன்று போட்டிகளில் தோல்வியைத் தழுவியிருந்தாலும், அதிரடி வீரர் ஏபி டிவிலியர்ஸ் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளது நம்பிக்கை அளிக்கும் ஒன்றாக உள்ளது. எனவே, இன்றைய போட்டியில் தென்னாப்பிரிக்க அணியும் தோல்வியைத் தவிர்க்க போராடும் என எதிர்பார்க்கலாம். தென்னாப்பிரிக்கா அணி இந்த மைதானத்தில் முதல் பேட்டிங்கில் 439 ரன்களைச் சேர்த்துள்ளது. ஆனால் சேஸிங்கில் 266 ரன்களை தென்னாப்பிரிக்கா அணி எட்டியதே இந்த மைதானத்தில் அதிகபட்சமாகும். எனவே, முதலில் பேட்டிங் செய்யும் அணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

சனி 10 பிப் 2018